
பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் அரவணைப்பு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை ஜாலியாகவும் அதே சமயம் நெஞ்சில் ஆணி அடிப்பது போலவும் சமீபத்தில் வந்த ‘ப.பாண்டி’ படம் சொன்னது.. தனுஷ் முதன்முறையாக இயக்குனராக மாறிய இந்தப்படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்திருந்தார்..
சமீபத்தில் வெளியான ‘பாகுபலி-2’ அலையிலும் கோட்ட கடந்த ஒரு வார காலத்தில் ப.பாண்டி’ ஓடும் தியேட்டர்களிலும் கூட்டம் வந்துகொண்டுதான் இருக்கிறது.. அந்தப்படத்தின் அழுத்தமான கதைக்கும் அது சொன்ன கருத்துக்கும் கிடைத்த மதிப்பையே இது காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


