
நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக முதல் பிரதி அடிப்படையில் ‘சற்குணம் சினிமாஸ்’ சார்பில் இயக்குநர் சற்குணம் தயாரித்து வரும் படம் ‘டோரா’.. தாஸ் ராமசாமி என்பவர் டைரக்சனில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படமான டோராவில் நயன்தாராதான் கதையின் நாயகியாக் நடிக்கிறார். அவருடன் தம்பி ரமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விவேக் – மெர்வின் என்ற இரட்டையர்களள் இசை அமைக்கும் இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. டோரா படத்தின் பாடல்களை, சிங்கிள் டிராக்காக சோனி மியூசிக் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஒரு பாடல் விரைவில் வெளியகவிருக்கிறது. தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக அனைத்து பாடல்களும் வெளியாகவிருக்கின்றன.


