முன்னணி காமெடியனாக உயர்ந்த யோகி பாபு..!


தமிழ்சினிமாவை பொறுத்தவரை அனைவரையும் சிரிக்கவைத்து வெற்றிபெறும் காமெடியன்கள் மிக குறைவு.. சந்தானம், சூரிக்குப்பிறகு கருணாகரன், சதீஷ் என சில காமெடியன்கள் உருவானாலும் அவர்களால் எல்லா நேரங்களிலும் எல்லா தரப்பினரையும் சிரிக்கவைக்க முடிவதில்லை என்பதே உண்மை.. ஆனால் சுந்தர்.சியால் உருவாக்கப்பட்ட நடிகர் யோகிபாபு, தனது உருவத்தாலும் வித்தியாசமான பாடிலாங்குவேஜாலும் நடிப்பாலும் ரசிகர்களை எளிதில் கவர்ந்துவிட்டார். குறிப்பாக ‘காக்காமுட்டை’ படம் மூலம் நன்றாக ரீச் ஆகிவிட்டார்.

சமீபத்தில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படம் அவரை மிகச்சிறந்த சோலோ காமெடியனாக ஒரு படி உயர்த்தி இருக்கிறது. படத்தில் யோகி பாபு வரும் காட்சிகள் முழுக்க அதகளம். உன் மூஞ்சியைப் பார்க்க பிடிக்கலை. ‘சார் பவுடர் போட்டிருக்கேன்’, ‘ ஐ யம் லண்டன் சிட்டிசன். அடிக்கிற வேலை எல்லாம் வேணாம்’, ‘ஜெயிச்சவனை தோத்தவன் ஏன் அடிக்கிறான்’, ‘எவ்ளோ பெரிய மூக்கு’, ‘இப்போ கோபமா டீயை கீழே ஊத்துவான் பாரேன்’ என கவுன்டர் கொடுத்து காமெடி சரவெடி கொளுத்துகிறார். இரண்டாம் பாதியில் குணச்சித்ர நடிகனுக்கான அம்சங்களை அள்ளித் தருகிறார். இந்தப்படத்தில் யோகிபாபுவின் நடிப்பை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர் இன்னும் சொல்லப் போனால் யோகி பாபுவுக்கு இது திருப்புமுனை திரைப்படம். இனி அதிக படங்களில் பாபுவைப் பார்க்கலாம்.

Leave a Response