
ஒரு காலத்தில் அதாவது இருபது வருடங்களுக்கு முன்பு தமிழில் தனியார் சேனல்கள் உதயமான காலத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி கலக்கி வந்தவர் தான் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி.. இப்போது நீண்ட நாட்கள் கழித்து ‘தர்மதுரை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்ததன் மூலம் மீண்டும் சினிமா வெளிச்சத்துக்கு வந்துள்ளார் மதுவந்தி.
இந்தப்படத்தை தொடர்ந்து இதைவிட பவர்புல்லான வேடமாக சிபிசிஐடி அதிகாரி வேடத்தில் நடிக்க இருக்கிறார்.. பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ்-ரித்திகா சிங் நடித்துவரும் சிவலிங்கா கன்னட படத்தின் ரீமேக்கில் தான் இந்த வேடமாம். அதேபோல ஆர்யா நடித்துவரும் ‘கடம்பன்’ படத்தில் வில்லத்தனம் கலந்த கேரக்டரில் நடிக்கிறாராம் மதுவந்தி.


