ஜீவாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய ‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ரவி மரியா. ஆனால் வசந்தபாலனின் ‘வெயில்’ படம் மூலம் வில்லனாக மாறிய ரவிமரியா, தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். இடையில் நட்டியை வைத்து ‘மிளகா’ என்கிற படத்தை இயக்கினார்..
இப்போது மிளகா படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய ரவிமரியாவே இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஹீரோயின் தவிர மற்றவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்கள். நாளை, சக்கரவியூகம் படத்தில் நட்டி நடித்திருந்தாலும் அதற்கு பிறகு அவருக்கு ஓரளவிற்கு அறிமுகத்தை கொடுத்த படம் ‘மிளகா’ தான்..
இது மிளகா படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். ஆனால் மிளகா படத்தின் சாயலும் இருக்கும். இப்போது நட்டிக்கு நல்ல ஒரு இமேஜ் இருக்கிறது. அதற்கு ஏற்றமாதிரி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்கிற ரவிமரியா, தான் நடிப்பில் பிசியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி இந்தப் படத்தை இயக்குகிறேன் என்கிறார். இந்த வாய்ப்பையாவது அவர் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.