“லிட்டருக்கு 5கி.மீ இலக்கு என்பதே பித்தலாட்டத்தை மறைக்கத்தான்” ; எம்.டி.சி அவலங்கள்..!

 

மாநகர பேருந்தில் பயணித்த சுகானுபவம் உங்களுக்கு உண்டா.? என்னது சுகமா..? காலையில ஒரு தடவை, சாயங்கலாம் ஒருதடவைன்னு ஆபீஸ் போயிட்டு வர்றதுக்குள்ள பெண்டு நிமிருது.. இதுல சுகம் என்ன வேண்டிக்கிடக்கு என குமுருபவர் தானே நீங்கள்…? அப்படியானால் காலையில் இருந்து மாலை வரையோ, மதியத்தில் இருந்து இரவு வரையோ இருக்கையை விட்டு நகராமல் எந்நேரமும் கைகால்களுக்கு வேலைகொடுத்தபடி பேருந்தை இயக்கும் ஓட்டுனர்களுக்கு எப்படி இருக்கும்..? அதைவிட கொடுமை தானே..?

சரி அதுபோகட்டும்.. அனைத்து மாநகர பேருந்துகளிலும் ‘நமது இலக்கு லிட்டருக்கு 5 கிமீ’ என எழுதி ஒட்டியிருப்பார்கள்… உங்க கண்களிலும் என்றாவது ஒருநாள் ஏதேச்சையாக கூட பட்டிருக்கும்.. இந்த ஒரு வாக்கியத்தை மையமாக வைத்து அதன் பின்னணியில் நடக்கும் பித்தலாட்டத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு..? கேள்விப்பட்டதை சொல்கிறோம்..

சென்னை பூந்தமல்லி போகும் வழியில் உள்ள ஒரு மாநகர பேருந்து டிப்போவுக்கு தினமும் 12,000 லிட்டர் டீசல் வருதாம்.  அதுல ஒரு லிட்டருக்கு 30 பைசா (அதுக்கு மேலயும் கூட இருக்கலாம்) அந்த டிப்போ கிளை மேலாளருக்கும், அதிகாரிகளுக்கும் கமிஷனா போகுதாம்.. டீசலை மொத்தமா வாங்குனா மத்திய அரசு அதிக வரி விதிக்குது, அது இவங்களுக்கு ரொம்ப வசதியா இருக்காம்,

போக்குவரத்து துறையை காப்பாத்துறோம்ங்கிற பேர்ல பெட்ரோல் பங்க் முதலாளிகள்கிட்ட பேசி வச்சிக்கிட்டு சந்தை விலைக்கு வாங்குறோம்கிற பேர்ல தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோலை ஒரே பங்குல போட ஏற்பாடு பண்ணிக்கிட்டு அதுல ஒரு கமிஷன் அடிக்கிறாங்களாம். மைலேஜ் மைலேஜ்னு டிரைவர்களை விரட்றதெல்லாம் இந்த கொள்ளையை மறைக்கத்தானாம், இவங்களை ஒழிச்சாலே லாபமும் கிடைக்கும், மைலேஜும் கிடைக்கும்” என்று ‘நமது இலக்கு 5 KMPL’ என்கிற முழக்கத்திற்கு பின்னே ஒளிந்துள்ள உண்மையை போட்டு உடைக்கிறார்கள் சம்பந்தப்பட்ட டிப்போவில் பணியாரும் சில பணியாளர்கள்..

 

 

Leave a Response