தமிழக சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார் – சவுமியாவுக்கு பாராட்டு

சென்னை மாநகரை பெரு​வெள்ள ஆபத்​தில் இருந்து காக்க,நிலத்​தடி நீர்​வளம் பெருக்க,பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி 1 கிமீ கட்​டு​மானம் தவிர்க்க “பள்​ளிக்​கரணை ராம்​சார் சதுப்பு நிலத்தை வரையறைப்படுத்தி அறிவிக்​கை” செய்​யக்​கோரி நேற்று பாமக தலை​வர் அன்​புமணி,பசுமைத் தாயகம் அமைப்​பின் தலை​வரும் தரு​மபுரி தொகுதி சமஉவு​மான சவுமியா அன்​புமணி ஆகியோர் துரைப்​பாக்​கத்​தில் உள்ள துரைப்​பாக்​கம் – பல்​லா​வரம் 200 அடி சாலை​யில் விழிப்​புணர்வுப் பேரணி நடத்தி பரப்புரையில் ஈடு​பட்​டனர்.

அப்​போது,பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை ஏன் பாது​காக்க வேண்​டும்? என்ற விவரங்​கள் அடங்​கிய துண்டு
பிரசுரங்​களை பொது​மக்​களுக்கு விநி​யோகம் செய்​தனர்.

இந்த நிகழ்​வில் அன்​புமணி பேசி​ய​தாவது….

பள்​ளிக்​கரணை சதுப்புநிலம் தற்​போதுவரை வரையறை படுத்​தப்​பட​வில்​லை.இது​தான் பள்​ளிக்​கரணை சதுப்பு நிலம் என்று வரையறைபடுத்தி அறிவிக்கை செய்யவேண்​டும்.அப்​போது​தான் இந்த சதுப்புநிலம் பாது​காக்​கப்​படும்.இந்தநிலம் 100 ஆண்​டு​களுக்கு முன்பு 15 ஆயிரம் ஏக்​கர் அளவில் இருந்​தது.

தற்​போது 2,500 ஏக்​கர் மட்​டும் தான் இருக்​கிறது.அத்​தனை இடங்​களும் அடை​யாறு பெருங்​குடி என்று வீடு​களால் ஆக்​கிரமிக்​கப்​பட்டுவிட்​டது.ஊழல் செய்​வதற்​காகத்​தான் 2 திரா​விடக் கட்​சிகளும் இவ்​வளவு ஆண்​டு​களாக சதுப்புநிலத்தைப் பாது​காக்​க​வில்​லை.தமிழகத்​தில் 20 இடங்​களுக்கு ராம்​சார் அங்​கீ​காரம் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

அதில்,இந்த இடம்தான் மிக​வும் பெரியது.அது​வும் சென்​னை​யில் உள்​ளது.பசுமைத் தீர்ப்​பா​யம்
ஆணை​யில்,சதுப்புநிலத்​துக்கு ஒரு கிமீ சுற்​றி​லும் எந்தக் கட்​டு​மான​மும் செய்​யக்​கூ​டாது என்று
தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.இதனால் சுற்​று​வட்​டாரத்​தில் இருக்​கும் பூர்வகுடிமக்​கள் வீடுகட்ட முடி​யாமல்
அவதிப்​படு​கின்​றனர்.

தமிழக அரசு எது சதுப்பு நிலம்? எது​வரை இந்த நிலம் இருக்​கிறது? என்​பதை அடை​யாளம் கண்டு அதை
அறிவிக்​கை​யாக வெளி​யிடவேண்​டும்.இளையதலை​முறை​யில் ஏதேதோ விசயங்​களுக்​காக இன்​ஸ்​டாகி​ராமில் ரீல்ஸ் போடு​கிறீர்​கள்.பள்​ளிக்​கரணை சதுப்புநிலத்தைப் பாது​காக்க விழிப்​புணர்வு ரீல்ஸ் போடுங்​கள்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் சூப்​பர் ஸ்டா​ராக சவுமியா அன்​புமணி இருக்​கிறார்.சென்​னைக்குக் கண்​டிப்​பாக 2 ஆவது விமானநிலை​யம் வேண்​டும்.

ஆனால்,அதை எங்கே கொண்டு வரு​வது என்​பது​தான் பிரச்​சினை​யாக உள்​ளது.பரந்​தூரில் விவ​சாய நிலங்​கள்
அழிக்​கப்​படக்​கூ​டாது.தமிழக அரசு ஒரு முடிவு எடுத்​திருக்​கிறார்​கள்.அதை நாங்​கள் வரவேற்​கிறோம்.

அதே​போல்,செய்​யாறு மேல்மா சிப்​காட் விரி​வாக்​கத்​துக்கு விவ​சாய நிலங்​கள் கையகப்​படுத்​தக்​கூ​டாது.பரந்​தூரில் கையகப்​படுத்​தப்​பட்ட நிலத்தை விவ​சா​யம் மற்​றும் விவ​சா​யம் சார்ந்த திட்​டத்​துக்குத்தான் பயன்​படுத்த வேண்​டும்.

அங்கு மிகப்​பெரிய நீர்த்தேக்​கத்தை உரு​வாக்கவேண்​டும்.அதைமீறி வேறு ஏதாவது திட்​டத்​திற்குப் பயன்​படுத்​தி​னால் போராட்​டம் நடத்​தப்​படும்.

இவ்​வாறு அவர் பேசினார்.

சவுமியா அன்​புமணி பேசுகை​யில்…

தமிழக அரசு பள்​ளிக்​கரணை ராம்​சார் சதுப்புநிலத்தை அறிவிக்கை செய்யவேண்​டும்.பள்​ளிக்​கரணை சதுப்புநிலத்தைப் பாது​காக்க சேட்​டிலைட் மூல​மாக அளவீடு செய்யவேண்​டும்.வேடந்​தாங்​கல் சரணால​யம் போல், பள்​ளிக்​கரணை​யில் பறவை​கள் சரணால​யம் இருக்​கிறது.
இந்தப் பறவை​களை​யும், இந்த இயற்​கை​யை​யும் அடுத்த தலை​முறைக்கு நாம் விட்​டுச் செல்லவேண்​டும்.இந்த
பள்​ளிக்​கரணை சதுப்புநிலத்தை நாம் பாது​காக்​க​வில்​லை என்​றால்​ மிகப்​பெரிய பா​திப்​பு ஏற்படும்

இவ்​வாறு அவர் பேசினார்.

Leave a Response