தமிழக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சி சேர வாய்ப்பு – மு.வீ தகவல்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்​டும் கர்நாடக அரசின் முயற்​சி​யைக் கண்​டித்து ஓசூரில்
இந்​திய பொதுவுடைமைக் கட்சி மற்​றும் தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில் நேற்று நடைபயணம்
நடை​பெற்​றது. அதற்கு தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்​சந்​திரன் தலைமை வகித்​தார்.

பின்னர் செய்​தி​யாளர்​களிடம் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செய்லாளர் மு.வீர​பாண்​டியன்
கூறிய​தாவது….

காவிரி நடு​வர் மன்​றத்​தின் 2007 ஆம் ஆண்டு இறு​தித் தீர்ப்​பை​யும்,2018 ஆம் ஆண்டு உச்சநீதி​மன்​றத் தீர்ப்​பை​யும் மதிக்​காமல் மேகதாதுவில் அணை கட்ட கர்​நாடக அரசு தன்​னிச்​சை​யாக முயற்​சிப்​பதை வன்​மை​யாகக்
கண்​டிக்​கிறோம்.

இடது​சா​ரி​கள் ஒருங்​கிணைப்​புக் குழு தேர்​தல் வரும்​போது சூழ்​நிலைக்கு ஏற்ப தனித்தோ அல்​லது கூட்​டாகவோ போட்​டி​யிடு​வது குறித்து முடிவு எடுக்​கப்​படும்.அரசி​யல் சூழல் உரு​வா​னால் நாடு முழு​வதும் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் தனித்​துப் போட்​டி​யிடும்.அத்​தகைய சூழல் ஏற்​பட்​டால் தனித்​துப் போட்​டி​யிட​வும் தயங்கமாட்​டோம்.

தமிழ்நாட்டில் குதிரை பேரம் இப்​போது நடந்து கொண்​டிருக்​கிறது.வட இந்​திய மாநிலங்​களில் இருந்து படிப்​படி​யாக தமிழகத்​துக்​கும் பரவி​யுள்​ளது.இது நல்​லதல்ல.எம்​எல்​ஏக்​கள் கட்சி மாறி​னால் அது மக்​களுக்குச் செய்​யும் துரோகம். குதிரை பேரத்​தில் யார் ஈடு​பட்​டாலும் நாங்​கள் எதிர்ப்​போம்.

தமிழக அமைச்​சர​வை​யில் இடம்​பெறும்சூழல் உரு​வாகி வருகிறது.ஓசூர் மண்​ணிலிருந்​தும் அமைச்​சர்
உரு​வாக வாய்ப்​புள்​ளது.

இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Leave a Response