பத்திரிகையாளர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி சென்னை பத்திரிகையாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில்….
சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் உரை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பத்திரிகையாளர்கள் மீது கடந்த ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் ( Madras Union of Journalists, MUJ) நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
முத்தமிழறிஞர், முன்னாள் முதலமைச்சர், காலம்சென்ற கலைஞர் அவர்கள், உச்ச பதவிகளை அடைந்தபோதும் தன்னை பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்பட்டவர்.அந்த உணர்வோடு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்தவர்.
அவருடைய தொடர்ச்சியாக, அவர் வழியில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அறிவித்திருப்பதற்கு சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.