தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை நாளை ( மே 7,2021) பதவியேற்கவுள்ளது.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளோர் மற்றும் அவர்களுக்கான துறைகள் ஆகியன அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்…
1. மு.க.ஸ்டாலின் – முதல்வர் (பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, , மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம் மாற்றுத் திறனாளிகள் நலன்)
2. துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர்
3. கே.என்.நேரு – நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
4.ஐ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்
5. பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர்
6. எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்
7. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண்மைத் துறை அமைச்சர்
8. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
9. தங்கம் தென்னரசு – தொழில்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல் துறை அமைச்சர்
10. எஸ்.ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்
11. முத்துசாமி – வீட்டுவசதித்துறை அமைச்சர்
12. பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
13. தா.மோ.அன்பரசன் – ஊரக தொழில்துறை அமைச்சர்
14. மு.பெ.சாமிநாதன் – செய்தி, விளம்பரத்துறை அமைச்சர்
15. கீதாஜீவன் – சமூக நலன், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர்
16. அனிதா ராதாகிருஷ்ணன் – மீன் வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.
17. இராஜகண்ணப்பன் – போக்குவரத்துத் துறை அமைச்சர்
18. ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்
19. சக்ரபாணி – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்
20. செந்தில் பாலாஜி = மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
21. ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
22. சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
23. பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
24. எஸ்.எஸ்.சிவசங்கர்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
25. பி.கே.சேகர் பாபு – இந்துசமய அறநிலையத்துறை
26. பழனிவேல் தியாகராஜன்- நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை
27. ஆவடி சா.மு.நாசர் – பால்வளத்துறை அமைச்சர்
28. செஞ்சி மஸ்தான் – சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
29. அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
30. மெய்யநாதன் – சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
31. சிவி கணேசன் – தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
32. மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
33. மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்
34. கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.