முதல்வர் பதவி ஏற்றார் மம்தா – முகம் இருண்ட மோடி

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிரடி வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார் மம்தா பானர்ஜி.

மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

66 வயதாகும் மம்தா, காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் களத்தில் சுழன்று, வரலாற்று வெற்றியைச் சாதித்திருக்கிறார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதலமைச்சராக இன்று காலை பதவியேற்றார்.

கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

எட்டு கட்டத் தேர்தல், மோடி,அமித்சாவின் ஏராளமான பரப்புரைகள், அதிகார துஷ்பிரயோகங்கள் ஆகிய அனைத்தையும் தாண்டி மம்தா முதல்வர் ஆகியிருக்கிறார்.இதனால் மோடி முகம் இருண்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

Leave a Response