கடவுளின் குழந்தைகள் மற்றும் நாட்டின் முதுகெலும்புகள் தொடர்பாக டிடிவி.தினகரன் கோரிக்கை

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் இன்று வெளீயிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில்…

தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாகப் பணி நிரந்தரம் கோரிப் போராடி வருகிறார்கள்.
கடவுளின் குழந்தைகளான அவர்களிடமும் ஆதாயமடைவது பற்றி ஆட்சியாளர்கள் யோசிக்காமல், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதைக் கடமையாகக் கருத வேண்டும். மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்

என்று கோரியுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது…

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் வேதனையளிக்கிறது.
நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளைத் தொடர்ந்து இப்படி கொட்டுகிற பனியிலும், மோசமான தட்பவெப்பத்திலும் போராட வைப்பது சரியானதல்ல. மத்திய அரசு இப்பிரச்னையைச் சுமூகமாகப் பேசித் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளித்து, விவசாயப் பெருமக்களின் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும்

என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Response