தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட ஈகியரான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள், “தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 27”! இவ்வாண்டு (2020), உலகெங்கும் இந்நாளை தமிழர்கள் எழுச்சியுடன் நினைவு கூர்ந்து, ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

நேற்று (27.11.2020) மாலை தமிழீழத்திலும், தமிழ்நாடெங்கும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பெ.மணியரசன் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பல்வேறு இடங்களிலும் வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

அவை பற்றிய விவரங்கள்….

தஞ்சை

தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்க அலுவலகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் பங்கேற்று உரையாற்றினார். த.தே.பே. தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் இலெ.இராமசாமி உள்ளிட்ட திரளான பேரியக்க உறுப்பினர்கள் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

சென்னை

சென்னையில் த.தே.பே. தலைமையகத்தில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாசுகர் தலைமையில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வில், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு தலைவர் புலவர் இரத்தினவேலவர் மாவீரர் ஈகச்சுடரை ஏற்றி வைத்தார். த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் வெற்றித்தமிழன், வி.கோவேந்தன், காஞ்சிபுரம் கிளைச் செயலாளர் கவியரசன், தென் சென்னைச் செயலாளர் இரமேசு, திருவள்ளுவர் கிளைச் செயலாளர் செயப்பிரகாசு, தி.நகர் கிளைச் செயலாளர் வெற்றிச்செல்வன் மற்றும் மகளிர் ஆயம் செந்தாமரை, தமிழின உணர்வாளர் கரிகாலன் உள்ளிட்ட திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

பெண்ணாடம்

கடலூர் மாவட்டம் – பெண்ணாடம் வட்டத்திலுள்ள துறையூர் மற்றும் சாத்துக்கூடல் கிராமங்களில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றன.

துறையூர் கிராமத்தில் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புரட்சிகர இளைஞர் முன்னணி அ.பெ.பாலகிருட்டிணன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மா.மணிமாறன், முருகன்குடி கிளைப் பொறுப்பாளர் பி.வேல்முருகன், தமிழ்க்கலை இலக்கியப் பேரவையின் செயற்குழு உறுப்பினர் தி.சின்னமணி ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர். வே.விக்னேஷ் நன்றியுரையாற்றினார். நிகழ்வில் பேரியக்கத் உறுப்பினர்கள், குழந்தைகள் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகுத்திரி ஏந்தி அமைதி வணக்கம் செலுத்தினர்.

சாத்துக்கூடல்

சாத்துக்கூடல் கிராமத்தில் த.தே.பே. கிளைச் செயலாளர் துரை.இளையராசா தலைமையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில், தே.இளநிலா வீரவணக்க உரையாற்றினார். ஜீவா நன்றியுரையாற்றினார். 20 க்கும் மேற்பட்ட பேரியக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மெழுகுத்திரி ஏந்தி அமைதி வணக்கம் செலுத்தினர்.

மதுரை

மதுரையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில், பேரியக்க மூத்த உறுப்பினர் மூ.கருப்பையா முதல் சுடரை ஏற்றி வைத்தார். பின்னர் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு மெழுகுத்திரி ஏந்தி அமைதி வணக்கமும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தற்போதைய தமிழீழ மக்களின் அவல நிலை குறித்தும், ஈழ இயக்கங்களின் செயல்பாடு பற்றியும் மதுரை மாநகர் செயலாளர் இரெ.இராசு, பொதுக்குழு உறுப்பினர் கதிர்நிலவன், மூ.கருப்பையா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

நிகழ்வில் மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் அருணா, “நாணல் நண்பர்கள்” தமிழ்தாசன், மகளிர் ஆயம் துணைத்தலைவர் பே.மேரி, சந்திரா, தி. கருப்பையா, அறிவழகன், விடியல் சிவா, சைமன் அன்னராசா, அருளர், தியாகலிங்கம், தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி

திருச்சியில் த.தே.பே. அலுவலகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுக்கு அ.மனுவேல் தலைமையேற்றார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் வே.க.இலக்குவன் தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர்கள் மூ.த.கவித்துவன், பாவலர் நா.இராசா ரகுநாதன், இனியன், கிருட்டிணமூர்த்தி, இரா.கருப்புசாமி, தமிழ்ச்செழியன் ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர். நிகழ்வில் மகளிர் ஆயம் வெள்ளம்மாள், வே.பூ.இராமராசு, முனியப்பன், அன்பழகன், சிறுவன் தி.முகிலன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்த்தேசியப்பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன் நிறைவுரையாற்றினார். பேரியக்கத் திருவெறும்பூர் கிளைச் செயலாளர் மு.தியாகராசன் நன்றி கூறினார்.

புளியங்குடி

தென்காசி மாவட்டம் – புளியங்குடியில் த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் க.பாண்டியன் தலைமையில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வில், மகளிர் ஆயம் கற்பகவள்ளி, மேனகா, கல்பனா, வியாகம்மாள், ஞானம், சரசுவதி, மாரியம்மாள், பொன்னுத்தாய், மிக்கேல் அம்மாள், சொர்ணம், பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓசூர்

ஓசூர் கே.சி.சி. நகரில் த.தே.பே. நகரச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில், மாவீரர் நாள் பாடலை முருகப்பெருமாள் பாடினார். அருள்மொழி, சுஜாதா, கவிதா, தீபா, சரிதா, வெண்ணிலா உள்ளிட்ட மகளிர் ஆயத்தினரும், இரமேசு, செல்வகுமார், ஸ்டாலின், சிவகுமார், செந்தில் மாறன், வனமூர்த்தி உள்ளிட்டோரும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். நிறைவாக த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கோ.மாரிமுத்து வீரவணக்க உரையாற்றினார்.

புதுச்சேரி

புதுச்சேரி வேல்ராம்பட்டில் த.தே.பே. புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி தலைமையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில், மாவீரர் படங்களுக்கு மெழுகுத்திரி கொளுத்தி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வீரவணக்கம் செலுத்தினர். அன்பு நிலவன், தே. சத்தியமூர்த்தி, கந்தன் கருணை, அசோக்ராசு, அரங்கதுரை, செல்வி, ஆறுமுகம், தமிழழகி, தரணிவேல், நாம் தமிழர் கட்சியினர் மதியழகன், பிரவீனா, முருகராசு, உணர்வாளர்கள் தமிழன்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். த.தே.பே. தலைமைச் செயற்குழு க.அருணபாரதி வீரவணக்கவுரையாற்றினார்.

காரைக்கால்

காரைக்காலில் திருநகரில் த.தே.பே. செயலாளர் ஜெ.சூர்யா தலைமையில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வில், ஏ.ஜெயபால், த.திருநாவுக்கரசு, இரா.விக்னேசு, செ.ஆதிமுரசு, பிரவின்குமார், இரா.தமிழ்ச்சேரன், ஞா.தமிழ் இலக்கியா, இரா.முத்தழகன், நா.திருமாவளவன், ஐ.செல்வகுமார், மு.ஜீவசாரதி, ச.சந்தோசு, ஐ.சிவக்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

குடந்தை

குடந்தையில் த.தே.பே. அலுவலகத்தில் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.விடுதலைச்சுடர் தலைமையில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வில், பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் தீந்தமிழன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

செங்கிப்பட்டி

பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டியில் த.தே.பே. அலுவலகத்தில் ஒன்றியச் செயலாளர் பி.தென்னவன் தலைமையில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில், த.தே.பே. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இரெ.கருணாநிதி, க.காமராசு, ஒன்றியக்குழு உறுப்பினர் அ.பகத்சிங், மறுமலர்ச்சி முன்னேற்றக் கழக பகுதி செயல்பாட்டாளர் வீரமணி மற்றும் திரளானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினார்கள்.

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்க அலுவலகத்தில் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் இ.தனஞ்செயன் தலைமையில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இரா.கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தை.செயபால் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

இராயக்கோட்டை

கிருட்டிணகிரி மாவட்டம் – இராயக்கோட்டையில் தமிழக உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தூ.தூருவாசன் தலைமையில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வில் காளியப்பன், பைரன், இலட்சுமணன், குமரவேல், முருகேசன், ராஜீ, விருமாண்டி, நாம் தமிழர் கட்சி சக்திவேல், திருமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த மாவீரர்களே, வீரவணக்கம்!

Leave a Response