நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தொழிலில், கலைத்துறையில் மென்மேலும் பல வெற்றிகள் காண உளமாற வாழ்த்துகிறேன் ஒரு சினிமா ரசிகன் என்ற முறையில்.
எல்லாம் தெறிந்த நீங்கள் உங்கள் கூமுட்டை ரசிகர்களிடம் அறிவுரை கூறக்கூடாதா?
என்னை வாழவைக்கும் தெய்வங்களான என் ரசிகர்களுக்கு,
டேய் கண்ணுங்களா.. என் இனமான மராட்டியத்துல மராட்டியன் தாண்டா ஆளுறான். என் மாநிலமான கர்நாடகத்துல கன்னடந்தாதாண்டா ஆளுறான். பக்கத்துல ஆந்திராவுல தெலுங்கன் தாண்டா ஆளுறான். கேரளாவுலகூட மளையாளி தான் ஆளுறான். ஏன் இந்தியாவுல உள்ள எல்லா மாநிலத்துலயும் அவனவன் இனத்துக்காரந்தான் ஆளுறான். தமிழ்நாட்டுல மட்டுந்தான் இதுவரைக்கும் தமிழனே இல்லாத வந்தவன் போனவனையெல்லாம் ஆள வட்சிப்புட்டாங்க… அதன் விளைவு தமிழ் நாட்டுல எல்லா உரிமையும் இல்லாம போச்சு… இனிமேலாவது இந்த நிலை மாறனும்னு நான் நினைக்கிறேன்.
என் பிழைப்பிற்காக தமிழ்நாட்டுக்கு வந்தேன் இந்த தமிழர்கள் நல்ல வாழ்க்கையை எனக்கு கொடுத்தாங்க… வசதியை கொடுத்தாங்க… ஆனாலும் என் மாநில மக்கள் மீது தான் எனக்கு அதிக பற்று… அதுனாலதான் என்னோட தொழில்களை கர்நாடகத்துல நிருவி என் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கேன். அதேபோல இந்த மண்ணுக்குச் சொந்தக்காரனுக்கு மட்டுந்தான் இந்த மண் மீதும் மக்களின் மீதும் அக்கறை இருக்க முடியும்.
எனவே நல்ல தமிழர் தலைமையை தேர்ந்தெடுத்து அரசியல் செய்யுங்க அல்லது நீங்களே தலைமை ஆகி அரசியல் செய்யுங்க… அதவிட்டுப்புட்டு சின்னப்புள்ள மிட்டாய்க்கு அடம் பிடிக்கிற மாதிரி நான் தான் முதலைமைச்சரா ஆகனும்னு அடம்புடிக்கிறது நல்லா இல்ல கண்ணுங்களா…
அது அந்தக்காலம்.. அது தவறிப்போச்சு… ஈழத்துல பல லட்சம் தமிழர்கள் செத்துப்போனப்ப நான் துடிக்கல, காவிரில தண்ணி விடாதப்ப கர்நாடகத்த நான் கண்டிக்கல, முல்லைப்பெரியாற இடிக்க வந்தப்போ நான் முனங்ககூட இல்ல. ஏன்னா எனக்கு இந்தியா பூரா மார்க்கெட்டு.. அதுவும் தென்னிந்தியாவுல செம சில்லறை, எல்லாரையும் அட்ஜஸ்ட் பன்னவேண்டிய கட்டாயம்.
கர்நாடகத்துக்கு சிம்ம சொப்பனமாவும், தமிழ்நாட்டுக்கு எல்லைச்சாமியாவும் இருந்த வீரப்பன கொலைசெய்யனும்னு சொன்னேன். இப்படி தமிழருக்கும் தமிழகத்துக்கும் ஒண்ணுமே செய்யாத, ஒண்ணுமே செய்யனும்னு நினைக்காத என்னைப்போய்… அரசியலுக்கு வரச்சொல்றீங்களேப்பா…தமிழ் நாட்டு மக்கள் அவ்வளவு இளிச்சவாயன்களா?
நான் உண்டு என் சம்பாத்தியம் உண்டுன்னு வாழ்ந்துக்கிட்டு இருக்கிற என்னை ஏம்பா இழுத்து தெருவுக்கு கொண்டு வரப்பாக்குறீங்க கண்ணுகளா?
நான் உங்கள வச்சு ஒரு அரசியல் பண்னிக்கிட்டுதான் இருக்கேன். அது தெரியாம என்ன வச்சு நீங்க அரசியல் பண்ண நினைக்கிறீங்களே… இதுக்குள்ள நான் சிக்கவும் மாட்டேன் சிக்கி சின்னாபின்னாமாவும் ஆக மாட்டேன் கண்ணுங்களா…
இப்புடி ஒரு அறிவுரைய உங்க கண்ணுங்களுக்கு சொன்னீங்கன்னா…. உங்கள வாழ வச்ச தெய்வங்களுக்கு ஏதாவது செஞ்ச மாதிரியும் இருக்கும்… உங்களுக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும்…. என்ன நான் சொல்றது?-வெற்றிக்குமரன்