குடும்ப அட்டைக்கு ரூ 1000 – தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு, இந்த மாதம் (ஏப்ரல்) அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன், அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதன்படி, நிவாரணம் வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியது. நேற்று ஒரு நாள் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 பேருக்கு நியாயவிலைக் கடைகளில் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இது மொத்தத்தில் 11.63% ஆகும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.நிவாரண பொருட்களைப் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவௌியினைக் கடைபிடித்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது. வரும் 7 ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படாது. அதற்குப் பதிலாக, வீடு வீடாகச் சென்று மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response