சென்னை மாநகர மக்களுக்கோர் எச்சரிக்கை – மாநகராட்சி அறிவிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் மார்ச் 30 ஆம் தேதி வரை 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் கொரோனா தொற்று தொடர்பாக அவ்வப்போது தகவல்களை வழங்கி விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு…….

வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் அமைந்துள்ள lifestyle-ல் பணியாற்றிய 3 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மார்ச் 10 முதல் 17 வரை ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கவனமுடன் இருக்கவேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் : 044 2538 4520 & 044 4612 2300

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Leave a Response