நான் பொதுவானவன், தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை–யாழ் முதல்வர் அதிரடி

ஆகத்து 17 அன்று இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழ்ப்பகுதிகளில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போட்டியிடுகிறது. வடமுதல்வராக இருக்கும் விக்னேசுவரன், இந்தத் தேர்தலில் யாருக்காகவும் வாக்குக் கேட்கப்போவதில்லை என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். அவருடைய அறிக்கை….
நான் வெளிநாடுகள் சென்றசமயத்தில்த் தான் பொதுத் தேர்தல் நியமிக்கப்பட்டது. நான் தற்பொழுதுதிரும்பிவந்துள்ளேன். தேர்தலில் உங்கள் பங்களிப்புஎன்னஎன்றுபலரும் என்னைக் கேட்கின்றார்கள். யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்துபத்துப் பேர் ஏழு ஆசனங்களுக்காகவும் வன்னியில் ஒன்பதுபேர் ஆறுஆசனங்களுக்காகவும் போட்டியிடுகின்றனர். தற்போதையதேர்தல் முறைமையின் கீழ் ஒரேகட்சிக்குள்ளேயேவிருப்புவாக்குகளைப் பெறபோட்டியாளர்களிடையேமுரண்பாடுகள் எழுவதுஎதிர் பார்க்கப்படுவதொன்றே.

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக 2013ம் ஆண்டில் பொதுவேட்பாளராகநான் நிறுத்தப்பட்டேன். நான் பதவிக்குவந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்அங்கத்துவக்கட்சிகள் பலநான் பக்கச் சார்பற்றுநடுநிலைவகிக்கவில்லையேஎன்றுஎன் மீதுகுறைபட்டுக் கொண்டனர். நான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பக்கச் சார்பாகநடந்துகொள்வதாகஎன்னைவிமர்சித்தனர். முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றமுறையில் பக்கச் சார்பற்றுநடந்துகொள்ளவேண்டும் என்றார்கள்.

உண்மையில் இதேமாதிரியானஒருநிலைசுமார் 53 வருடங்களுக்குமுன்னர் நான் கொழும்புசட்டமாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுஎனக்குஏற்பட்டது.

ஒருசாரார் தேர்தலில் எனக்குவாக்களித்துவெற்றிகொள்ளச் செய்தனர்.எனக்கெதிராகவாக்களித்தவர்கள் தலைவர் பதவிவகிக்கவந்தவுடன் நீங்கள் சகலசட்டமாணவமாணவியர்களுக்குந் தலைவர் என்றமுறையில் பக்கச் சார்பற்றுநடந்துகொள்ளவேண்டும் என்றுஎன்னிடம் கேட்டுக் கொண்டார்கள். எனக்குவாக்களித்தவர்கள் தாம் அவ்வாறுஎன்னைத் தேர்ந்தெடுக்கக் காரணமாய் இருந்ததால் தமதுநலவுரித்துக்களைமட்டுமேநான் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்கள். நான்ஏற்றுக் கொண்டபதவியின் கடமைகள்,பொறுப்புக்கள்,கடப்பாடுகள் ஆகியவற்றைஉத்தேசித்துசட்டமாணவனாகநான் இருந்தபோதேஅத் தருணத்தில் பக்கச் சார்பற்றவனாகநடந்துகொள்வதேஎனதுகடமைஎன்றுமுடிவுசெய்தேன். எனதுதலைவர் பதவிக்காலம் முழுவதும் என் ஆதரவாளர்களின் மன உளைச்சலுக்குமத்தியில் நான் பக்கச் சார்பற்றே நடந்து கொண்டேன். எதுசரியோ,எதுமுறையோஅதையேசெய்தேன்.

அதேவிதமானஒருசூழ்நிலைதற்போதுஎன்னைநாடிவந்துள்ளது.

என்னைக் கூட்டமைப்பினர் வடமாகாணமுதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் பக்கச் சார்பாக இறங்கி அக்கட்சி அபேட்சகர்களுக்காக ஆதரித்துப் பேசுவது எனக்கழகல்ல என்பதேஎனதுகருத்து.

என்னைப் பொறுத்தவரையில் மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து அன்னியோன்யமாக இயங்குவது எனக்கு ஒருபிரச்சினையல்ல. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடனும் ஐக்கியத்துடனும் கடமையாற்றக் கூடியவர்களாக இருக்கவேண்டும். கட்சிகளின் நலனை வி டஎமது மக்களின் நலனும்நலவுரித்துக்களுமே முதன்மைபெறவேண்டும் என்பதுஎனதுகருத்து.

அண்மையில் இங்கிலாந்தில் ஹரோ என்ற இடத்தில் இம் மாதம் 17ந் திகதிபேசும் போதுநான் கூறியதை இங்கு உங்களுக்கு குறித்துக் கூற ஆசைப்படுகின்றேன்.

“ மக்களுக்காகஅர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் எம்நாட்டில் வாழும் எமதுமக்கள் தெரிவுசெய்யவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. தமிழ்ப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில்  வள்ளுவன் வாக்கிற்கிணங்க,நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாதமனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.

அத்துடன்,தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமதுமக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றையகாலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்.

அதனை உணர்ந்துஅவர்கள் தமக்குள்ள வரலாற்றுப் பொறுப்பை, தார்மீகக் கடமையைச் சரிவரச் செய்வதற்குநான் துணையாகநிற்பேன்”என்று கூறினேன்.

போர் முடிந்து ஆறு வருடங்கள் கழிந்தநிலையில் எமதுவடமாகாண சபை தேர்ந்தெடுக்கப்பட்டுசுமார் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டநிலையில் போருக்குப் பின்னரானசூழலில் மூன்றுமுக்கியசவால்களைநாம் யாவரும் எதிர் நோக்கியுள்ளோம்.

முதலாவதாகபோருக்குப் பின்னரானபுனர்நிர்மாண,மீள்குடியேற்ற,அபிவிருத்திப் பணிகள் எமதுமக்களின் தேவைகளையும் அத்தியாவசியங்களையும் அறிந்துஅனுசரித்துமுழுமையானநோக்குடன் நடத்தப்படாமல் தான் தோன்றித் தனமாகஅப்போதைக்கப்போதையவாறுநடைபெற்றுவருவதுமனவருத்தத்தைஅளிக்கின்றது.

இரண்டாவதாகஅரசியல் ரீதியாகநிரந்தரத் தீர்வு இன்னமும் எங்கள் கைகளுக்குப் படாமல் விலகிச் செல்வதாகவே இருக்கக் காண்கின்றோம். மூன்றாவதாகபோரினால் பாதிக்கப்பட்டோருக்குநீதிகிடைப்பதும் சேய்மைப் பட்டுக் கொண்டே இருக்கின்றது.

இவ்வாறானஒருசூழலிலேயேநீங்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டியஒருகடப்பாட்டில் உள்ளீர்கள். இவ்வாறானசூழலிலே, இங்கிலாந்தில் நான் குறிப்பிட்டதற்கிணங்கவேஎமதுபிரதிநிதிகளைநீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டியதுஅத்தியாவசியமென்றுஎனக்குப்படுகிறது. நான் குறிப்பிட்டசவால்களுக்குமுகம் கொடுக்கும் விதத்தில் உங்களுள் சிறந்த பிரதிநிதிகளை நீங்கள் தேர்ந்தெடுத்துபாராளுமன்றத்திற்குஅனுப்புவதுஉங்கள் தலையாயகடமையாகவிளங்குகின்றது.

தேர்தல் முடிந்ததும் எமது மிகமுக்கிய சவாலான அரசியல் தீர்வுகளுக்காகஒருமனதுடன் அரசியல் ரீதியாகஒத்துழைக்கக் கூடியபிரதிநிதிகளையேநீங்கள் தேர்ந்தெடுத்துஅனுப்பவேண்டும்.

அண்மையில் தெற்கத்தைய அரசியல்வாதியொருவர் என்னிடம் கேட்டார் புதிதாகஅமைக்கப்படப் போகும் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மந்திரிப் பதவிகள் கொடுக்கமுன்வந்தால் உங்கள் கட்சி அவற்றை ஏற்குமா என்று. அப்போது பிரித்தானியபிரதமர் கமரூன் அவர்களுக்கு ஜேர்மானியத் தலைவி அன்ஜெலாமேர்கல் அவர்கள் கூறியதுதான் என் நினைவுக்குவந்தது. அரசியல் ரீதியான கூட்டுக்களிலும் கூட்டமைப்புக்களிலும் “சிறியகட்சியேஎக்காலத்திலும் அடிபட்டுப் போய் விடுகிறது”என்றார் அவர். எனதுசிங்களநண்பருக்குநான் கூறினேன்- அரசியல் ரீதியானஒருநிரந்தரத் தீர்வுஎ மக்குக் கிடைக்கும் வரையில் எக்காலத்திலும் அமைச்சுப் பதவிகளை எமது பிரதிநிதிகள் ஏற்கக் கூடாது என்பதே எனது கருத்து என்று.

இல்லையென்றால் அதாவது அவ்வாறு நாங்கள் ஏற்றுக் கொண்டால் எமதுமக்களின் கோரிக்கைகள்    காற்றோடுகாற்றாய்ப் பறந்துவிடுவன. எம்மைப் பெரும்பான்மைச் சமூகம் தன்னுள் உள்ளிழுத்துக் கொண்டுவிடும் என்றேன். மேலும் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புஎன்றகொள்கையின் கீழ் எமதுஅமைச்சர்கள் சுதந்திரம் இழந்துவிடுவார்கள். எமதுமக்களின் உரித்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் அவர்கள் கைவிடவேண்டியநிலைவரும் என்றேன்.

மேற்கூறியவைபலஎமதுவடமாகாணமக்களுக்குமட்டும் பொருந்தும் கூற்றுக்கள் என்றுஎண்ணவேண்டியதில்லை. இந்நாட்டின் சகலருக்கும் பொதுவானகருத்துக்களேஅவை. இவ்வருடத் தொடக்கத்தில் எம்மக்கள் புதியதொருசகாப்தத்தைஉருவாக்கமுன்வந்தனர். நல்லாட்சி,நீதி,நியாயம்,சமத்துவம்,சமாதானம்,சகலருக்கும் பாதுகாப்புபோன்றகொள்கைகளைமுன்வைத்துபுதியதொருஎதிர்காலத்தைக் கட்டிஎழுப்பமுன்வந்தார்கள். அந்தவாறானமக்களின் அபிலாஷைகளை,எதிர்பார்ப்புக்களைநடைமுறைப்படுத்தவேண்டியகடப்பாடுசகலஅரசியல் வாதிகளுக்கும்,சகலநிறுவனத் தலைமைத்துவங்களுக்கும்,ஊடகங்களுக்கும்,குடிசனசங்கங்களுக்கும் இருக்கின்றதுஎன்பதைநாங்கள் மறக்கக் கூடாது. தனிப்பட்டமனிதகுழுக்களின் நன்மைகளுக்காகமட்டும் நடந்துகொள்ளாது,மற்றையமக்கட் கூட்டங்களுக்குக் கெடுதிவிளைவிக்காது,நல்லாட்சியைஏற்படுத்தக் கூடியசக்திகளை இனங்கண்டு ஜனநாயகரீதியில் நாம் யாவருஞ்சேர்ந்துஅச்சக்திகளுக்குத் துணையாகநிற்பதற்குவருந்தேர்தலானதுகளம் அமைத்துக் கொடுக்கும் என்றுநம்புகின்றேன். எமதுதேர்தல் வாக்குறுதிகளும் விஞ்ஞாபனங்களும் இந்நாட்டின் கூடியமக்களின் நலனைப் பேணும் விதமாகஅமையவேண்டும். அப்படிநடந்துகொண்டால்த்தான் வருங்காலச் சந்ததியினர் எம்மைநன்றிக் கண்களுடன் பார்ப்பார்கள்.

எதுஎவ்வாறுநடப்பினும் ஜனநாயகஅத்திவாரத்தை இட்டுஅதன் மீதுஎமதுவருங்காலத்தைநம் நாட்டில் ஏற்படுத்தசர்வதேசசமூகமானதுதுணையாகநிற்கும் என்றுஎதிர்பார்க்கின்றோம். எமதுமக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்யும் விதத்தில் சர்வதேசசமூகம் எம்முடன் கைகோர்த்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

எனவேஎனதுசதோதரசகோதரிகளே! நான் உங்களிடம் இச் செய்தியின் ஊடாகக் கேட்டுக் கொள்வதுயாதெனில் திறமானவேட்பாளர்களைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யுங்கள். வள்ளுவன் வழிநின்றுஉங்களைவாழவைக்கக் கூடியவர்களைத் தேர்ந்தெடுங்கள். நாம் யாவரும் எமது ஜனநாயகஉரித்துக்களைமுழுமையாகப் பாவித்துஎமதுஅரசியல் பயணத்தைபலம் மிக்கதாகச் செய்வோமாக! எம்முடையநடவடிக்கைகளைக் கூர்ந்துகவனித்துநாம் யாவரும் உங்கள் சேவையில் வெளிப்படைத்தன்மையுடனும் பதிலளிக்கும் கடப்பாட்டுடனும் நடந்துகொள்ளஉதவுவீர்களாக!தேர்தல் காலங்களில் நாம் சுற்றுலாக்காலப் பயணிகள் போன்றுநடந்துகொள்ளாதிருப்போமாக!

“அரசாங்கம் ஒருநம்பிக்கைப் பொறுப்பு. அதன் அலுவலர்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். நம்பிக்கைப் பொறுப்பும் அதன் பொறுப்பாளர்களும் மக்களுக்காகவேஉருவாக்கப்பட்டுள்ளார்கள்” (ஹென்றிக்ளே–மேம்பட்டஅரசியல்வாதியும் சிறந்தஅமெரிக்கப் பேச்சாளரும்)
இறைதுணைஉங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதாக!
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a Response