2 இலட்சம் இடங்களில் 1 இலட்சம் இடம் நிரம்பவில்லை- பொறியியல் படிப்புக்கு மதிப்பில்லை

தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 530க்கும் மேற்பட்ட, பொறியியல் கல்லூரிகளில், பி.இ., – பி.டெக்., இடங்களில், நடப்பு ஆண்டில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜுலை 28 வரை நடக்கவுள்ள 26 வரை  88 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில், 534 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரத்துடன், இந்த கல்லூரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த ஆண்டில், மொத்தமுள்ள, 2.05 லட்சம் இடங்களில், ஒரு லட்சம் இடங்கள் மட்டுமே நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாகப் பொறியியல் படிப்புக்கு இருந்த மதிப்பு அதிரடியாகக் குறைய. ஏற்கெனவே படித்து முடித்தவர்களுக்கே சரியான வேலை வாய்ப்புகள் அமையாததுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. கல்வியை அறிவாகப் பார்க்காமல் வேலைவாய்ப்புக்கான கருவியாகப் பார்ப்பதால்தான் இப்படி ஆகிறது என்றும் போகப்போக நிலைமை மோசமாகும் என்று கல்வியாளர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள்.

Leave a Response