திருமாவளவன் பாராட்டிய திரைப்படம்

சமூக வலைதளங்களில் பெண்கள் சிக்கி எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்கிற கருத்தை முன்வைத்து கருத்துகளைப் பதிவு செய் என்ற திரைப்படம் தயாராகியிருக்கிறது.

இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தினை ஜித்தன் 2 மற்றும் 1 ஏஎம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராகுல் பரமகம்சா இயக்கியுள்ளார்.

பழம்பெரும் நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் கதாநாயகனாக நடித்துள்ளார்.படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை உபாசனா நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் கணேஷ்ராகவேந்திரா, பின்னணி இசை பரணி ஆகியோர் உட்பட பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்றி உள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், படத்தின் முதல்பார்வையை வெளியிட்டார்.படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த அவர் படக்குழுவையும், இயக்குநர் ராகுலையும் வெகுவாகப் பாராட்டினார்.

இம்மாதிரியான படங்கள் தற்போதுள்ள சமூக சூழ்நிலையில் தேவை என்றார்.

கடந்த வாரம் இத்திரைப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு தலைமை அதிகாரி திருமதி.லீலா மீனாட்சியும் படத்தின் இயக்குநரைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response