சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்காத தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காலி குடங்களுடன் நின்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் காலி குடங்களுடன் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன்,ஜெ.அன்பழகன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது…..
குடம் இங்கே! குடிநீர் எங்கே? தண்ணீர் பிரச்சினையை தமிழக அரசு தீர்க்க வேண்டும். மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்துவதைக் குறை கூறவில்லை. அவர்கள் அதற்காக யாகம் நடத்தினால் பரவாயில்லை, அவர்கள் தங்களது பதவியைக் காப்பாற்றவே யாகம் நடத்துகிறார்கள்.
தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. சபாநாயகரை நீக்குவதை விட முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை அகற்ற வேண்டும்
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.