ஒரு நாள் போட்டி – இந்திய அணி அபார வெற்றி

விராட்கோலி தலைமையிலான இந்திய மட்டைப் பந்தாட்ட அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் ஜூலை 12 அன்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, முதலில் இங்கிலாந்து அணியை பேட் செய்யுமாறு பணித்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. 49.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 40.1 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 269 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோகித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 137 ரன்கள், கோலி 75 ரன்கள், தவான் 40 ரன்கள் எடுத்தனர்.

Leave a Response