பிக்பாஸ் சிக்கலில் குஷ்பு – என்ன நடந்தது?

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் தமிழக தொழிலாளர்களைப் பயன்படுத்தாமல் மும்பை தொழிலாளர்களைப் பயன்படுத்தினார்கள்.

இது தொடர்பாக ஃபெப்சி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. மாறாக தொழிலாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள்.

இந்நிலையில், அச்சிக்கல் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், தேவைப்படுகிற அளவு ஃபெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்த பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டதாகவும் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும் நடிகை குஷ்புவும் தெரிவித்தனர்.

இன்று பத்திரிகையாளர்களை இருவரும் சந்தித்தனர்.

தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளியே இச்சிக்கல் உருவாகக் காரணமாக அமைந்துவிட்டது என்றும் அது இப்போது சரி செய்யப்பட்டுவிட்டதென்றும் குஷ்பு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்குபெறுகிறவர் கமல், அதனால் இது தொடர்பாக அவரிடம் பேச தேவையில்லை, நிகழ்ச்சியை நடத்தும் தயாரிப்பாளர்களிடம் பேசி தீர்வு காணப்பட்டதென்றும் குஷ்பு கூறினார்.

Leave a Response