விஜய் டிவி டிடிக்கு நாளை சிறந்த தினம்.. ஏன் தெரியுமா..?


இயக்குனர் கௌதம் மேனன் தனது ஒன்ராகா ஒரிஜினல்ஸ் மூலம், இசை கலைஞர்களின் தனிப்பாடல்களை ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி 14-ம் நாள் “கூவ கூவ” பாடலினை வெளியிட்டனர்.

இந்த பாடலை நடிகர் தனுஷ் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில், மதன் கார்க்கி பாடல் வரிகளில் “உலவிரவு” என்ற சிங்கிள் பாடல் தயாராகியுள்ளது.

இந்த பாடலுக்கு கார்த்திக் இசையமைத்ததோடு, பாடலையும் பாடி உள்ளார். இதில் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி(டிடி) நடித்துள்ளார். “உலவிரவு” முழு பாடல் காதலர் தினத்தன்று வெளியாகும் என கௌதம் மேனன் அறிவித்துள்ளார்.

Leave a Response