இந்திய விண்வெளி ஆய்வு மையம் தலைவராக ஒரு தமிழர் நியமனம்

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இசுரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இசுரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் ரூபாய் செலவில் செயலாற்றப்படுகிறது. இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இசுரோவிற்கு ஏ.எஸ்.கிரண்குமார் தற்போது தலைவராக உள்ளார்.

இசுரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.[2] இசுரோ தனது நிறுவனக் காலத்திலிருந்து தொடர்ந்து பல சாதனைகளைக் கண்டு வந்துள்ளது. 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இசுரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது. 1980இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ். எல். வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகினியை விண்ணேற்றியது. தொடர்ந்து செயற்கைக் கோள்களை முனையச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனையத் துணைக்கோள் ஏவுகலம் (PSLV) மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத் தக்க ஜி. எஸ். எல். வி என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்துக் காட்டியது. இந்த ஏவுகலங்கள் மூலம் பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களையும் இஃச்ரோ ஏவியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் இசுரோ இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி பிறநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் விண்வெளி/ செயற்கைக் கோள் தொடர்புடைய செயல்பாடுகளை ஆற்றி வருகிறது. தனது ஏவுகலங்களையும் ஏவுமிடங்களையும் தனது செயற்கைக்கோள் ஏவுதிறனுக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. புவியியைவு செயற்கைக் கோள் ஏவுகலத்தை (ஜி.எஸ்.எல்.வி) மேம்படுத்தி முழுமையும் இந்தியப் பொருட்களால் கட்டமைப்பதும் மனிதரியக்கு விண்வெளித் திட்டங்கள், மேலும் பல நிலவு புத்தாய்வுகள் மற்றும் கோளிடை ஆய்வுக்கருவிகள் செயல்படுத்துவதையும் எதிர்காலத் திட்டங்களாகக் கொண்டுள்ளது. தனது பல்வேறு பணிகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் குவியப்படுத்திய மையங்களை நாடெங்கும் கொண்டுள்ளது. பன்னாட்டு விண்வெளிச் சமூகத்துடன் பல இருவழி மற்றும் பல்வழி உடன்பாடுகளைக் கண்டு கூட்டுறவாகச் செயல்படுகிறது.

இசுரோ தலைவர் கிரண்குமாரின் பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து புதிய தலைவராக சிவன்.கே நியமிக்கப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கிறார்.

சென்னை எம்ஐடியில் 1980-ல் ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடித்து, 1982-ல் பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்இ பட்டமும் மும்பை ஐஐடியில் முனைவர் பட்டமும் பெற்றார். 1982-ல் ‘இஸ்ரோ’வில் பிஎஸ்எல்வி திட்டத்தில் சிவன் முக்கிய பங்காற்றினார். அறிவியல் சேவைக்காக 2014-ல் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமும் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது உட்பட பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.

Leave a Response