‘சக்தி’ படம் மூலம் சினிமாவில் நுழைந்த வரலட்சுமியின் தங்கை..!


சரத்குமாரின் மகளான வரலட்சுமி ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியபின் அவரைத்தேடி தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வாய்ப்புகள் வருகின்றன. அந்தவகையில் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர்ஷினி என்பவர் இயக்கியுள்ள ‘சக்தி’ படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் வரலட்சுமி..

ஆச்சர்யமாக இந்தப்படத்தின் மூலம் வரலட்சுமியின் தங்கை, அதாவது சரத்குமாரின் இளையமகளான பூஜாவும் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார். ஆனால் நடிகையாக அல்ல, ஆடை வடிவமைப்பாளராக.. ஆம். இந்தப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வரலட்சுமியின் ஆடைகளை பூஜா தான் வடிவமைத்துள்ளார்.

இதற்கு முன்பும் கூட வரலட்சுமி வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அவருக்கான உடையை வடிவமைத்து கொடுத்துவந்தாரம் பூஜா. சரி இதையே ஏன் தொழிலாக செய்யக்கூடது என சினிமாவில் அடியெடுத்து வைத்துவிட்டாராம் பூஜா.

Leave a Response