பிக்பாஸ் நூறாவது நாளில் ஓவியா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு செப்டம்பர் 30-ம் தேதி நூறாவதுநாள். அந்நாளை சிறப்புநிகழ்ச்சிகள் மூலம் கொண்டாட நிகழ்ச்சிக்குழு முடிவு செய்துள்ளதாம். அந்நாளில், இந்நிகழ்ச்சியின் போது ‘பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வெளியேறிய ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஜூலி, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட அனைவருமே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

அன்றைய தினத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 1- நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

இப்போது ரசிகர்கள் மத்தியில் உள்ள மிகப்பெரிய கேள்வி, இறுதிநாள் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொள்வாரா? என்பதுதான்.

ஓவியா இப்போது என்ன செய்கிறார்? என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் “பலரும் எப்போது கலந்துரையாடுவீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறீர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாள் முடிந்தவுடன் கலந்துரையாடலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய உடன், அந்நிகழ்ச்சியை பற்றி பேசுவதை தவிர்த்து வந்த ஓவியா. ஒரே ஒரு வீடியோ பதிவில் தன்னைப் பற்றி எழுந்துள்ள கேள்விகள் அனைத்திற்குமே பதிலளித்துவிட்டு அமைதியாக ஓய்வெடுத்து வந்தார்.

தற்போது பல்வேறு பட வாய்ப்புகளும், விளம்பர வாய்ப்புகளும் வருவதால் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார் ஓவியா. இதனால் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வது என்பது சாத்தியமில்லை என்றே சொல்லப்படுகிறது.

Leave a Response