
இடதுசாரி எழுத்தாளர் கெளரி லங்கேஷ் இந்துத்துவ பயங்கரவாதிகளால் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கெளரி லங்கேஷ் தொடர்ச்சியாக கருத்தியல் ரீதியாகவும், ஆதாரப் பூர்வமாகவும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி வந்துள்ளார்.
நரேந்திர மோடியின் குஜராத் இனப்படுகொலை குறித்து விளக்கும் “Gujarat Files” என்ற புத்தகத்தை கன்னடத்தில் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.
கெளரி லங்கேஷ் ஈழப் போராட்டத்தையும்
ஆதரித்தவர். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் மீதான தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுத்தவர்.
மூவர் தூக்கினை ரத்து செய்யக் கோரி new socialst alternative ஒருங்கிணைத்த கூட்டத்தில் மே பதினேழு இயக்கம் அவருடன் பங்கேற்றிருக்கிறது.
சங் பரிவார் கும்பலைக் குறித்து மிக தைரியத்துடன் தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தார்.
நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி வரிசையில் கெள்ரி லங்கேஷ் இந்துத்துவ பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இந்துத்துவ பயங்கரவாதம் ஜனநாயகத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது.
சமூக செயல்பாட்டாளர்களையும், எழுத்தாளர்களையும் கொலை செய்வதை இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இப்படியான சிந்தனையாளர்கள் கொல்லப்படுவதும், தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் அதிகரித்திருக்கின்றன.
இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும்.
சமூக செயல்பாட்டாளர்கள் மீது வன்முறையை தூண்டும் விதத்தில் பேசும் இந்துத்துவ அமைப்புகள் மற்றும் கட்சித் தலைவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
you can kill the person but not the idea
– மே பதினேழு இயக்கம்


