விஜய்சேதுபதியின் புரியாத புதிருக்கு விடை கிடைத்தது..!


சில படங்கள் படப்பிடிப்பு, போஸ்ட் புரடக்சன் என எல்லா வேலைகளும் முடிந்தபின்னும் மாதக்கணக்கில் ரிலீஸாகாமல் இருக்கும். இதில் பெரிய நடிகர்களின் படங்களும் அடக்கம். அப்படித்தான் விஜய்சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ படம் என்ன காரணத்தாலோ நீண்ட நாட்களாக வெளிவராமல் முடங்கி கிடந்தது.
.
இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஜே.எஸ்.கே நிறுவனம் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தப்படத்தை ரிலேஎஸ் செய்யும் பணிகளில் இறங்கிய இந்த நிறுவனம், சமீபத்தில் தங்களது தரமணி படத்தை வெளியிட்டது.

அந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு உற்சாகம் தரவே சூட்டோடு சூடாக ‘புரியாத புதிர் படத்தை செப்-1ல் ரிலீஸ் செய்கிறார்கள். விஜய்சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் த்ரில்லராக உருவான இப்படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட்ட ‘மெல்லிசை’ என்ற தலைப்பு பொருத்தமாக இல்லை என கருதியதால், பின்னர்தான் ‘புரியாத புதிர்’ என தலைப்பை மாற்றினார்கள்.. ரஞ்சித் ஜெயக்கொடி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

Leave a Response