
இன்று (15.8.2017 )கிழக்கு தாம்பரம் அன்னை அருள் அரங்கத்தில் நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு நடைபெற்றது இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்
இப்பொதுக்குழுவில் நடிகர் சங்கத் துணைத்தலைவரும் இயக்குனர் நடிகர் பொன்வண்ணன் நாம்தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்வதாக அறிவித்தார்.
மேலும் நான் நாம்தமிழர் கட்சி உருவான நாளிலிருந்தே கட்சியின் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன் நானும் சீமான் அவர்களும்மாயாண்டி குடும்பத்தார் படப்பிடிப்பில் இருக்கும்போதுதான் அவரை முதன்முதலாக கைது செய்து கூட்டிச்சென்றார்கள் நானும் திரு.மணிவண்ணன் அவர்களும் சீமான் அவர்களை பலமுறை பல சிறைச்சாலைகளுக்கு சென்று பார்த்துள்ளோம் இதுநாள் வரை வெளியிலிருந்து கவனித்துக்கொண்டிருந்த நான் இன்றிலிருந்து கட்சியில் இணைந்து பொறுப்பாக செயல்படுவேன் என்று அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து சீமான் உட்பட மாவட்ட நிர்வாகிகளும் பொன்வண்ணனை வரவேற்றுப்
பேசினார்கள்.


