தமிழ்த்திரையுலகுக்கு இன்னொரு நயன்தாரா

சண்டைப் படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் வெங்கடேஷ். முதன்முறையாக  ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் நாயர் தயாரிக்கும் ‘ ரொம்பநல்லவன்டா நீ’ என்ற நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார்.

நகைச்சுவையோடு பயச்சுவையும் (த்ரில்) கலந்து தயாராகியிருக்கும் இப்படத்தில்  நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க  வில்லனாக எத்தன் புகழ் ‘ சர்வஜித்’ நடிக்கிறார்.

“என் படங்களில் நகைச்சுவைக்கு முக்கிய இடம் உண்டு. எனினும் முழு நீள காமெடி படம் நான் இயக்கியதில்லை. இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக  இருந்தது.  முன்பின் அறியாத இரண்டு நபர்களின் ஏழு நாட்கள் நட்பு,அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களின் அடிப்படையில் அமைந்ததே ‘ரொம்ப நல்லவன்டா நீ’ என்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்

மனோகர் ஒளிப்பதிவில், ராம்சுரேந்தர் இசை அமைப்பில்,  கனல் கண்ணனின் சண்டைப்பயிற்சியில், விஜய் படத்தொகுப்பில் இந்த படம் குறுகிய காலத்தில் தயாரான இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா அண்மையில் நடைபெற்றது.

அப்போது பேசிய இயக்குநர் வெங்கடேஷ். இந்தப்படத்தின் நாயகி, சுருதிபாலா கேரளாவிலுள்ள திருவில்லாவைச் சேர்ந்தவர், அங்கிருந்து ஏற்கெனவே வந்தவர் நயன்தாரா. அந்த ஊரிலிருந்து ஒரு பெண்ணை அழைத்துவந்து நடிக்க வைத்தால் படத்துக்குக் கொஞ்சம் கூடுதல்விளம்பரம் கிடைக்கும் என்று நினைத்தோம். அவரும் இன்னொரு நயன்தாரா என்று சொல்லப்படுகிற அளவு நடித்திருக்கிறார் என்றார்.

இந்தப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Leave a Response