குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட நிறைய வாழ்வாதாரத் திட்டங்களுக்கு மானியம் குறைப்பு- மோடி அரசின் அட்டூழியம்


அருண்ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான திட்டங்களுக்கு இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த மானியங்களைப் பாதிக்கும் கீழே குறைத்திருக்கின்றார்கள். இதுவரை இப்படியொரு மக்கள்விரோத நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்க யாரும் துணியவில்லை என்று அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர்.
சமூக நலத்திட்டங்களுக்கு கடந்த ஆட்சியும், இந்த ஆட்சியும் வழங்கியுள்ள மானியம் தொடர்பான ஒரு புள்ளி விபரம்.

பஞ்சாயத்து ராஜ் – முந்தைய அரசு- 3, 400 கோடி. மோடி அரசு- 94 கோடி.

விவசாயம் – முந்தைய அரசு- 19,852 கோடி. மோடி அரசு- 17,004 கோடி.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு – முந்தைய அரசு- 18,588.39 கோடி. மோடி அரசு- 10,382.40 கோடி.

குடிநீர் மற்றும் சுகாதாரம் – முந்தைய அரசு- 12,107 கோடி. மோடி அரசு- 6,243.87 கோடி.

நீர் வளம் – முந்தைய அரசு- 6,009 கோடி. மோடி அரசு- 4,232 கோடி.

பட்டியல் இன மக்களுக்கான திட்டங்கள் – முந்தைய அரசு- 43,208 கோடி. மோடி அரசு- 30,000 கோடி.

பழங்குடி மக்கள் திட்டங்கள் முந்தைய அரசு- 26,714 கோடி. மோடி அரசு- 19,000 கோடி.

ஸ்வச் பாரத் அபியான் – முந்தைய அரசு-12,100 கோடி. மோடி அரசு- 6,236 கோடி.

மதிய உணவு திட்டம் – முந்தைய அரசு- 11,770 கோடி. மோடி அரசு- 9,236 கோடி.
இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது மோடியும் ஜெட்லியும் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்பது புரிகிறது.

Leave a Response