ஓவியாவிடம் கமலும் தோற்றுப்போனார்


நாட்ல எவ்வளவு பிரச்சனை நடக்குது இது தேவையான்னு அக்கறையுடன் கூறுவோர் மன்னித்து பொறுத்தருள்க. ஒரு பொழுதுபோக்கு மட்டுமே.

ஓவியா செல்பி கதை மட்டும் காண்பிக்கவில்லை.

ஓவியா மியூசிக்கல் சேர் மட்டும் காண்பிக்கவில்லை.

பரணி சுவரேறி குதிக்கும் போது ஏன் காப்பாற்றவில்லைன்னு கேட்டப்போ விழுந்தா என்ன கால் உடையும் அவ்ளோதானேன்னு சொல்ற காயத்திரி, ஓவியா ரெட் கார்ப்பெட் இழுத்து ஜூலி விழும் போது ஓவர் சீன் போட்டதை கால் உடையும் தானேன்னு விடாம ஒருவாரம் ஓவியாவையே கவர் பண்ணது.

ஓவியாவைப் பற்றி அவரது நன்னடத்தை, நேர்மை, குழந்தை எண்ணம் இதெல்லாம் காண்பிக்காமல் தனியாக எடிட் பண்ணாத நிகழ்ச்சியில் காண்பித்தது.

கேவலமாக, ரெளடி, பொறுக்கி போல பொய், புரணி, ஆள் இல்லாத போது குறை சொல்லும் காயத்ரி, சினேகன், சக்தி, ரைசா, எல்லாருக்கும் மசாஜ், கை கால் அமுக்கிவிடுதல், டீ, காபி குடுத்து ஆயா வேலை பார்த்து பம்மும் ஜீலி எல்லாரையும் கவர் பண்ணிட்டு திடீர்ன்னு ஓவியாவை ஓரம் கட்டுவது

இதெல்லாம் என்ன சொல்லுதுன்னா ஓவியா கிட்ட (அந்த இடத்தில் அதே குணமுள்ள யாராக இருப்பினும்) திருட்டுத்தனம் பண்ண ஆரம்பிச்சியோ அப்பவே நீ தோற்றுவிட்டாய் பிக்பாஸ். நடுநிலை தவறிய கமல் அவர்களுக்கு அனுதாபங்கள். இனி பிக்பாஸ் பார்ப்பது சந்தேகமே. இரிட்டேட்டிங்.

Leave a Response