‘சாமி-2’வுக்கு விக்ரம் காட்டிய தாராளம்..!


ஹரி டைரக்சனில் விக்ரம் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன் வெளியான ‘சாமி’ படத்தை பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.. ஒரு போலீஸ் படத்திற்கான அத்தனை இலக்கணங்களும் சரியாக அமைந்திருந்தது அந்தப்படம். மேலும் அப்போதுதான் மினிமம் கியாரண்டி ஹீரோவாக மாற ஆரம்பித்திருந்த விக்ரமை கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்த்திற்கும் உயர்த்தியது..

தற்போது அந்தப்படத்தின் இரண்டாம் பாகம் ‘சாமி-2’ என்கிற பெயரில் உருவாகி வருகிறது.. இந்தப்படத்தில் முதல் பாகத்தின் நாயகி த்ரிஷாவுடன் இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடிக்க இருக்கிறார்.. தற்போது துருவ நட்சத்திரம் மற்றும் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் நடித்துவரும் விக்ரம், அதை முடித்துவிட்டு ‘சாமி-2’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.. அதுமட்டுமல்ல இந்தப்படத்திற்காக கிட்டத்தட்ட 110 நாட்கள் கால்ஷீட்டை வாரி வழங்கியுள்ளார் விக்ரம்

Leave a Response