சத்குரு மீது விமர்சனம் வைத்த இசைஞானி..!


இசைஞானி இளையராஜா தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை சந்தித்தார். அவருக்கு வாழ்த்து சொல்ல கமல் நேரிலேயே வந்து வாழ்த்து சொன்னார். இந்த நிகழ்வில் பேசிய இளையராஜா திடீரென சத்குரு பற்றிய விமர்சனத்தை முன்வைத்து பேசி ஆச்சர்யப்படுத்தினார்.. அவர் பேசியதாவது..

“’சத்குரு’ன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறவங்கலாம் சத்குரு கிடையாது. ரமண மகரிஷி ஒருவரே சத்குரு. நான் யாரையும் தவறாகப் பேசவில்லை. ரமண மகரிஷியின் பெருமையைக் குறித்துதான் பேசுகிறேன். அவர், ஆடு, மாடுகளுக்கெல்லாம் மோட்சம் கொடுத்தவர்” என்றார் இளையராஜா. கடந்த சில மாதங்களுக்கு முன் கோவையில் நடந்த நிகழ்வுகளை குறித்தே அவர் இப்படி பேசினார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response