
08-05-2017 முதல் 10-05-2017 கண்ணகிப்பெருவிழா நடத்தப்படும் என்று வீரத்தமிழர்முன்னணி அறிவித்துள்ளது. அதுபற்றிய செய்திக்குறிப்பு…
மறம் வீழ்த்தி அறம் காத்த மான மறத்தி, எங்கள் கண்ணகி பெருமாட்டிக்கான விழா வருகின்ற மே மாதம் நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நடக்க இருக்கிறது. மூன்று நாள் நிகழ்வாக நடக்கவிருக்கும் நிகழ்வில் முதல்நாள் கண்ணகி பெருமாட்டி பிறந்துவளர்ந்த பூம்புகாரில் (காவிரிப்பூம்பட்டினம்), மேமாதம் 8 தேதி காலை 10.00 மணியளவில் சிலப்பதிகார பாடல்கள் பாடி கண்ணகி தீபம் ஏற்றப்படுகிறது. ஏற்றப்பட்ட இந்த தீபம் கண்ணகி நடந்து மதுரை சென்ற தடத்தின் வழியாக மதுரைக்கு கொண்டுசெல்லப்படும் (பூம்புகார், மயிலாடுதுறை, திருவிடைமருதூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி (உறையூர்), விராலிமலை, பிரான்மலை, அழகர்மலை, மதுரை.
இரண்டாம் நாள் மேமாதம் 9 ஆம்தேதி மாலை மதுரையில் மாநிலம் தழுவிய கண்ணகிப்பெருவிழா நடத்தப்படும். கண்ணகி பெருவிழா கூட்டம் முடிந்த பிறகு, தீபம் மதுரையில் இருந்து புறப்பட்டு வைகையாற்றின் மேற்குக் கரை வழியாக வைகை அணைவரை சென்று, பிறகு தேனி, கம்பம், வருசநாடு, கீழக்கூடலூர் வழியாக பயணப்பட்டும். மூன்றாம் நாளான மேமாதம் 10 ஆம் தேதி சித்திரை பெளர்ணமி என்று சொல்லப்படும் சித்திரை முழுநிலவு நாளில் கண்ணகி தீபத்தோடு கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தப்படும்.
இந்த மூன்று நாள் நிகழ்விலும் அண்ணன் சீமான் அவர்கள் நேரடியாக கலந்துகொண்டு கண்ணகி பெருவிழாவை வழிபாடாக முன்னெடுக்கின்றார். எனவே அனைவரும் கண்ணகி பெருவிழாவிற்கு தயாராகுவோம்.
பூம்புகார், மயிலாடுதுறை, திருவிடைமருதூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை(விராலிமலை), மதுரை, தேனி, மாவட்டங்களை சேர்ந்த உறவுகள் கண்ணகி தீபம் வரும் வழியில் கண்ணகிக்குடில் அமைத்து, கண்ணகி தீபத்தை வரவேற்க ஏற்பாடு செய்யும்படி வேண்டுகிறோம்.
பண்பாட்டு மீட்பு தொடர்பயணத்தில் என்றும் உங்களோடு
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


