‘மெய்யப்பன்’ ஆக மாறுகிறார் கமல்..!


அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியது படக்குழு. அதனைத் தொடர்ந்து கமலுக்கு காலில் அடிபட்டதால், அறுவை சிகிச்சை செய்து ஒய்வெடுத்து வருகிறார். ஜனவரி 2017ல் மீண்டும் ‘சபாஷ் நாயுடு’ பணிகளைத் துவங்க திட்டமிட்டு இருக்கிறார். இந்நிலையில், மெளலி இயக்கத்தில் கமல் ‘மெய்யப்பன்’ என்ற தலைப்பில் படம் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

இது குறித்து விசாரித்த போது, “மெளலி இயக்கத்தில் கமல் நடிக்கவிருப்பது உண்மை தான். அதற்கு ‘மெய்யப்பன்’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், ஏ.வி.எம் நிறுவனம் அப்படத்தை தயாரிக்கவில்லை. அதன் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ‘சபாஷ் நாயுடு’ முடித்துவிட்டு, அதன் பணிகளை இருவருமே துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். முழுக்க காமெடி பின்னணியில் இப்படம் உருவாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்கள்.

Leave a Response