முதல்வர் விஜய்க்கு மேயர் பிரியாவின் அதிரடி கேள்விகள்

சென்னை மேயர் பிரியா மீது,விஜய் கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூகவலைதளங்களில் ஆபாச தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்….

நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும்தான் த.வெ.க அரசின் கொள்கையா?

ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடக் கூடாதா? மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
த.வெ.க விர்ச்சுவல் வாரியர்ஸ் (virtual warriors) என்று சொல்லிக்கொண்டு,விர்ச்சுவல் அப்யூசர்ஸ் (Virtual abusers) உருவாக்குவது நியாயமா?

என்மீது,தொடுக்கப்பட்ட அத்தனை,ஆபாச,கேலி இழிசெயலுக்கும் எதிராக தலைமைக் காவல்நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?

கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களைச் சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?

த.வெ.க வைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும்தான் மாண்பு உள்ளதா?
இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்கக்கூடாது என்பதுதான் த.வெ.க. அரசின் நிலைபாடா?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மாநகரத்தின் மேயராக இருப்பவர் நிலையே இப்படியா? என்று வெளிமாநிலத்தவர் வியப்புடன் கேள்வி எழுப்புகிறார்கள்.தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இப்படி ஓர் ஆட்சியா? என தலையிலடித்துக் கொள்கிறார்கள்.

– இராசன்

Leave a Response