போதை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – திருமாவளவன் பேட்டி

திருச்சி விமான நிலை​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசினார் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.அப்போது அவர் கூறியதாவது…

அதி​முக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பதவி விலகுவது தமிழக அரசி​யலுக்கு ஆரோக்​கிய​மானது அல்ல.
எந்​தப் பின்​னணி​யில் இதை அவர்​கள் செய்​கிறார்​கள் எனத் தெரி​யாது.அதி​முக​வின் உள்​கட்சி விவ​கார​மாக​வும் இதை கடந்து செல்ல முடிய​வில்​லை.மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட​வர்​கள் திடீர் திடீரென பதவி வில​கு​வது
ஜனநாயகத்​துக்கு உகந்​தது அல்ல.

கூட்​டணிக் கட்​சிகள் மீது நம்​பிக்கை இல்​லாமல் தவெக​வினர் அதி​முக சட்டமன்ற உறுப்பினர்​களை பதவி விலகச் செய்ய வைக்​கிறார்​களா? என்ற யூகத்​துக்கு பதில் சொல்ல முடி​யாது.இந்த ஆட்சி 5 ஆண்​டு​கள் தொடரவேண்​டும் என்​ப​தில் தெளி​வாக இருக்​கிறோம்.

அமைச்​சர்​கள் ஆனந்த்,ஆதவ் அர்​ஜூனா ஆகியோர் என்னைச் சந்தித்து ஜூலை 1 ஆம் தேதி நடைபெறும் தேநீர் விருந்து போன்ற கூட்​டத்​துக்கு அழைப்பு விடுத்​தனர்.இது தவெக கூட்​ட​ணிக்கு முழு​மை​யான வடிவம் கொடுக்​கும் கூட்​ட​மாக இருக்​கலாம்.கரூர் துயரச் சம்​பவத்​துக்குப் பிறகு முதல்​வர் என்ற அடிப்​படை​யில் விஜய் அங்கு சென்று பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு ஆறு​தல் சொல்லவேண்​டும் என்ற எதிர்​பார்ப்பு எல்​லோருக்​கும் உள்​ளது.அவர் அங்கே செல்​வது அவசி​ய​மானது.எந்தத் தொகுதி இடைத்​தேர்தலிலும் நான் போட்​டி​யிடப்​போவ​தில்லை.

இடைத்​தேர்​தலில் போட்​டி​யிட வேண்​டும் என்​றோ,அமைச்​சர​வை​யில் இலாகா கேட்டோ அழுத்​த​மும் தரவில்​லை. அமைச்​சர் சரத்​கு​மார் போதைப் பொருள் பயன்​படுத்​தி​யது உண்​மை​யாக இருந்​தால்,அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response