சாதிக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா

அதிமுகவில் கூட்டணி கட்சிகளுட னான பேச்சுவார்த்தை நேற்று அதி காரப்பூர்வமாக தொடங்கியது. முதல்கட்டமாக 7 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஜெயலலி தாவை சந்தித்துப் பேசினர்.

சட்டப்பேரவை தேர்தலில் மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைக் கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுகவின் நிலை தெரியாமல் இருந்தது. அந்தக் கட்சி கூட்டணி அமைத்து போட்டி யிடுமா, தனித்துப் போட்டியிடுமா என்ற குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில், 7 கட்சிகளின் தலை வர்கள் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்துப் பேசியதன் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியுள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர் ஜி.தேவராஜன், மாநில செயலாளர் பி.வி. கதிரவன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், இந்திய குடியரசு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்தனர்.

இவர்களைத் தொடர்ந்து வணி கர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையனும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அவர் கூறும் போது, ‘‘வணிகர்கள் சங்கம் என்ப தால் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது. எங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் அளித்துள்ளோம்’’ என்றார்.

ஆதரவு தெரிவித்த கட்சிகளிடம் அதற்கான கடிதங்களை பெற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா, அவர்களிடம் தனித்தனியாக 10 நிமிடங்கள் பேசியதாக கூறப்படு கிறது. மேலும் சில கட்சிகள் கூட்டணி யில் சேரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அந்தக் கட்சிகளுடன் பேசி, விரைவில் கூட்டணி முடிவு கள் வெளியிடப்படும் என தெரிகிறது.

தமாகா, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணையும் என தெரிகிறது. இந்தக் கட்சிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதா சந்தித்துள்ள அனைவருமே தங்கள் சாதியினரை நம்பியே கட்சி நடத்துபவர்கள் என்பதால் இவர்களுடன் கூட்டணி அமைத்த ஜெயலலிதா மீது விமர்சனங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

Leave a Response