
காதல் திருமணத்திற்கு எதிராக நடந்தேறும் படுகொலைகளுக்கு முக்கிய மூல காரணம் பா.ம.க ராமதாஸ்தான். கைது செய்ய வேண்டும் என்றால் ராமதாசைத்தான் முதலில் கைது செய்யவேண்டும்,என்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் கூறியுள்ளார்.
பட்டப்பகலில் படுகொலை சந்திசிரிக்கிறது ஆளும் அதிமுக அரசின் சட்டம் ஒழுங்கு!! உடுமலையில் நடந்தேறிய கோரப் படுகொலையை ஆதித்தமிழர் பேரவை மிக வன்மையாக கண்டிக்கிறது. அ.தி.மு.க அரசின் செயலற்ற ஆட்சியால் தலித்துகளுக்கும், உழைக்கின்ற மக்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. காதல் திருமணத்திற்கு எதிராக நடந்தேறும் படுகொலைகளுக்கு முக்கிய மூல காரணம் பா.ம.க ராமதாஸ்தான். கைது செய்ய வேண்டும் என்றால் ராமதாசைத்தான் முதலில் கைது செய்யவேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் தாராபுரத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
உடுமலைபேட்டை சாதிவெறி கொலையை கண்டித்து ஆதித்தமிழர் பேரவை உட்பட அமைப்புகள் நடத்திய போராட்டம்:
உடுமலைப்பேட்டையில் சாதிவெறியர்களால் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் படுகொலையை கண்டித்தும் கொடூரதாக்குதலில் உயிருக்கு போராடும் கெளசல்யாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் ,சாதிமறுப்பு இணையர்களை கொடூரமாக வெட்டிய சாதிவெறியர்களை கைது செய்ய வலியுறுத்தியும் உடுமலையில் இன்று மாலை ஆதித்தமிழர் பேரவை சார்பாக மாநில துணைப் பொதுச்செயாலாளர் மா.ஈழவேந்தன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் திராவிடர் விடுதலை கழகம், தீண்டாமை ஒழிப்பு முன்னனி உள்ளிட்ட அமைப்புகள் பங்கெடுத்தன.


