‪பிக் பாஸை த்ரில்லராக்கிவிட்டார்‪ ஓவியா

பிக் பாஸ் வீட்டுல இருக்கிற அந்தனை ஆம்பளை பொம்பளைங்களையும் ஒரு ராத்திரி பூரா கதவுக்கு குப்பை டப்பாவை முட்டுக்குடுக்க வெச்சி ஹவுஸ் அரெஸ்ட் பண்ணி வெச்சிருந்தவ பை சொல்லிட்டுப் போனான்னா அவ பைத்தியமா. ஷோவோட பிக் பாஸே தான் தான்னு நிரூபிச்சுட்டுப் போயிருக்கான்னு அ‪பிக் பாஸை த்ரில்லராக்கிவிட்டார் ஓவியா. பொழுதன்னிக்கும் அவளைப் பத்தி பொரணி பேசிக்கிட்டிருந்த அத்தனைப் பேரையும் நல்லா வெச்சி செஞ்சிட்டா கமல் விஜய் டிவியையும் சேர்த்து.

ஓவியா போட்ட பிச்சையில ஷோ கொஞ்சம் ஷோக்கா போற தெகிரியத்துலையும் ஜெயலலிதா இல்லாத தெம்புலையும் கவர்மெண்ட்டுக்கு எதிரா ஊழல் கீழல்னு நாம கொஞ்சம் ஓவராத்தான் சவுண்டு விட்டுட்டமோனு தலைல கை வெச்சிக்கிட்டு உக்காந்து இருப்பாரு கமல் பாவம். வேணும்னா முழுசா வேணும் வேண்டாம்னா எதுவும் வேண்டாம்னு தெளிவா இருக்கிற ஓவியாவைப் போய் கமல் ஷோவுக்குக் கூப்ட்டதுதான் செட்டாவலை போல,‬ லைஃபே கேம் பிக் பாஸென்ன பெரிய மயிராங்கற ஓவியாவை நாம பைத்தியம்ங்கிறோம்.‬

பிந்து மாதவி என்கிற டிங்கரிங் தேவைப்படும் பொம்மைக்கு முழுசாக தமிழில் ஒரு வாக்கியம் பேச வருவதற்குள் பிக் பாஸ் முடிந்துவிடும். இது வந்திருப்பதால் ஓவியா பயப்படுகிறார் என்று சக்தியிடம் கூறி கிக்கிக்கிக்கீ என்றார் காயத்ரி.

-–– விமலாதித்தமாமல்லன்

Leave a Response