
#biggbosstamil episode #30
ஓவியா கன்பெஷன் ரூமில் சிவப்பு உடையில் அழுது கொண்டு இருக்கின்றார்.
பார்ப்போரை உருகவைக்கும் அழுகை அது… ஓவியாவின் கண்ணீருக்குப் பொதுவெளியில் இருக்கும் வரவேற்புக்கு 20 செகன்டுகளுக்கு ஓவியாவின் விழித்திரையை விட்டு கேமரா அகலவில்லை.
பிக் பாஸ் வீட்டைப் பற்றிக் கேட்கும் போது… எல்லாம் சரி என்றாலும் எமோஷனல் ஆன பாட்டு வேண்டாம் என்கின்றார்… அன்பாக யாராவது பேசினால் அழுகின்றார்.
நான் இருக்கேன் செல்லக்குட்டி என்று கொஞ்ச ஆசை என்றாலும் வெயில் வாட்டும் இந்த வேளையில் தெருவில் அலைவதும் அடுத்த வேலை சோறும் கேள்விக்குறியாகி விடும் என்பதால் அப்படிச் சொல்ல முடியாமல் நான் தவிப்பதை என்ன வென்று சொல்வது?
அதை விட உங்களிடம் பேச எனக்குப் பிடிக்கும் என்ற அந்த மழலை எனக்குப் பிடித்து இருக்கின்றது. காரணம் முகம் தெரியா அந்தக் குரலிடம் மட்டும் அந்த வீட்டில் நடக்கும் விஷயங்களை மனம் விட்டுப் பேசலாம் என்பதால் அந்தக் குரல் பிடித்து இருக்கின்றது.
மனதில் இருப்பதைக் கொட்ட அந்தக் குரல் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதை விட கம்போர்ட் சோனில் எல்லாவற்றையும் சொல்லலாம்.பொதுவாய் ஒரு பெண்ணிடம் கம்போர்ட் சோனை உருவாக்குவது மிகக் கடினம். அப்படி உருவாக்கி விட்டால், அவர்கள், உங்களிடம் நீங்களே எதிர்பார்க்காத அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் ரகசியங்களையும் பகிர்வார்கள்.
அதனால் ஓவியாவுக்கு பிக்பாஸ் குரல் பிடித்துப் போனதில் வியப்பேதும் இல்லை.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
26.07.2017


