
கிரிக்கெட்டைப்போலவே தமிழர்களின் வீர விளையாட்டான கபடிக்கும் கடந்த 2014-ம் ஆண்டு புரோ கபடி லீக் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது ப்ரோ கபடி லீக்-சீசன் 5 நடைபெறவுள்ளது. இதில் தமிழ் தலைவாஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றனர். இந்த அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு முன்னோட்டமாகத்தான் கமல் தவித்திருந்த பதிவு பரபரப்பை கிளப்பியது.
“வாழ்க்கையின் போராட்டங்களை புன்னகையுடன் எதிர்கொள்ளும் கமல், கபடி யுத்த களத்தில் எங்களது வீரர்களுக்கு சிறந்த வழிக்காட்டியாக இருப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “கபடி விளையாட்டுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன். நமது முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என கமல் குறிப்பிட்டுள்ளார்


