
நயன்தாரா, ஆரி நடிப்பில், திகில் த்ரில்லர் பின்னணியில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘மாயா’. அஷ்வின் சரவணன் தமிழில் இயக்குநராக அறிமுகமான இப்படம் பாக்ஸ் ஆபீசிலும் தொடர்ந்து முன்னிலை பெற்றது. இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்துள்ள அஷ்வின் அதற்கான கலைஞர்கள் வேட்டையில் இறங்கி உள்ளார்.
இப்படத்தில் முன்னணி வேடத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அஷ்வின் தெரிவித்துள்ளார். டைரக்சனில் இருந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் எஸ்.ஜே.சூர்யா படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி உள்ள `நெஞ்சம் மறப்பதில்லை’ விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுதவிர விஜய்-அட்லி படம், ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. மேலும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஷிவதா நாயரும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. `இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட இயக்குநர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


