தமிழகத்தின் உள்விவகாரங்களை அறிய ஆர்வம் காட்டும் அமெரிக்கா – சான்றுடன் வெளியானது

கோவையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ், நவம்பர் 5 – 2016 இல் வெளியிட்டிருக்கும் பத்திரிகை செய்தி, இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களை அறிந்துகொள்வதில் அமெரிக்கா காட்டும் ஈடுபாட்டையும், தமிழகத்துக்குள் இருக்கும் இடைநிலைச் சாதி அமைப்புகளின் மனநிலையையும் ஒருசேர வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்,

அமெரிக்க தூதரக அதிகாரி Ken W.McBRIDE மற்றும் Subramani R.Mancombu ஆகியோரும் கடந்த ஒரு மாத காலமாக சென்னை அமெரிக்கா தூதரக அலுவலகத்திலிருந்து கோவையில் சந்தித்துப் பேச நேரம் கேட்டனர். அமெரிக்க அதிகாரிகளுக்கு என்னிடம் என்ன பேச்சுவார்த்தை என்று யோசித்தபடியே நேரம் ஒதுக்க நேற்று இரவு எனது பண்ணை இல்லத்தில் அவர்களுடனான சந்திப்பு நிகழ்ந்தது.

என்னை சந்தித்த அமெரிக்கா அதிகாரி மெல்ல பேசத் தொடங்கினார். தமிழகத்தில் காதல் திருமணம் செய்பவர்களை வெட்டிக் கொன்று விடுகிறார்களாமே அதற்கு பெயர் ஆணவக்கொலையாமே(honor killing) அதைப்பற்றி தலித் அமைப்புகள்,அரசியல் கட்சிகள் ஆகியோரிடம் கேட்டபொழுது கண்ணீர் விட்டு கதறுகிறார்கள்.உயர் ஜாதிப் பெண்களை காதலித்து திருமணம் செய்யும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தாக்கப்படுவது ஏன்?

இதன் மறுபக்கத்தை தெரிந்துகொள்ளவே நாங்கள் வந்தோம் என்றார்.அவர்களுடைய கேள்வி எனக்கு ஆச்சிரியத்தை அளித்தாலும் தமிழ்நாட்டின் உள்விவகாரங்களைப் பற்றி அமெரிக்கா தூதர் அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ற என் கேள்விக்கு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தார் அந்த அமெரிக்க அதிகாரி.

.இருப்பினும் தமிழகத்தில் வாழும் பெரும்பான்மை சமுதாயத்தின் மீதான அவருடைய தவறான கண்ணோட்டத்தை மாற்ற என்னுடைய தெளிவான விளக்கம் பின்வருமாறு அமைந்தது.

Ø இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழத்தில் நடைமுறையில் இருந்து வந்த ஜாதி,சமுதாய,சம்பிராதயங்களை உடனடியாக ஒழித்துக்கட்டுவதாகக் கூறி, தமிழகத்தை ஐம்பது ஆண்டு காலமாக ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே இதற்கு முதல் காரணம்.

Ø தங்கள் ஓட்டு வங்கிக்காக தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை மற்ற சமுதாயத்திற்கு எதிராக தூண்டிவிடுவதும், இலவசம் மற்றும் மதுவின் மூலமாக மனித வளத்தை வீணடிப்பதையும்,தலித் சமுதாயத் தலைவர்களை தூண்டிவிட்டு பணத்திற்காகவும்,சுய லாபத்திற்காகவும், மற்ற சமுதாயத்தின் பெண்களை காதலிக்க தலித் இளைஞர்களைத் தூண்டுவதும், இதனால் அவர்கள் வீசிய வலையில் அறியாப் பெண்கள் வீழ்வதும்,அதன் தொடர்ச்சியாக காவல்நிலையத்தில் பெண்ணின் பெற்றோரும்,உற்றார் உறவினரும் கண்ணீர் விட்டு கதறுவதும், பதினாறு வயது முதல் காதல் வலையில் வீழ்ந்த பெண்ணை பதினெட்டு வயது தொடங்கிய முதல் நாளில் திருமணம் செய்துகொண்டு பெற்றோரின் கண்ணில் பெண்ணை காட்டாமல் பணம் கேட்டு மிரட்டுவதும், ஆசையாக பாராட்டி,சீருட்டி வளர்த்த பெண் தன் கண் முன்னே ஏமாற்றப்படுவது காணப்பிடிக்காமல் ஆற்றாமையால் அரிவாள் ஏந்துவதும்,ஆத்திரத்தில் வன்முறை செய்வதும் ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ள இயற்கை குணம்.இது ஆணவத்தால் நடத்தப்படும் கொலையல்ல ஆற்றாமையால் நடத்தப்படும் கொலை.

Ø பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்தி நிகர்நிலை பாலின பயிற்சி அளிக்க வேண்டிய அரசு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல் மூலமாக பெண்ணை துரத்தி துரத்தி காதலிப்பதையும்,சீண்டுவதையும் ஹீரோயிசமாகவும், பெற்றோர்களையும், பெரியோர்களையும் அவமரியாதை செய்வது வேடிக்கை நிகழ்வாகவும், மது அருந்தி புகை பிடிப்பது ஆண்மையின் அடையாளமாகவும் முன் நிறுத்தி,தமிழகத்தின் பண்பாட்டையும், குடும்பக் கலாச்சாரத்தையும் கேலிப்பொருளாக்கி விட்டார்கள்.

Ø திராவிடக் கட்சிகள் தொடர்ந்து ஆட்சியிலிருக்க பலம் பொருந்திய மண்ணின் மைந்தர்களுக்கு பதவி ஆசை காட்டி, கை கட்டி,வாய் பொத்தி,குனிந்து கும்பிட வைத்து விட்டார்கள்.

Ø தாழ்த்தப்பட்ட சமுதாய அமைப்புகளுக்கு கருவறை முதல் கல்லறை வரை இலவசத்தை வழங்கி மனித சக்தியை வீணடித்து தொழிற்துறையை பின்னோக்கி தள்ளிவிட்டார்கள்.

Ø பீர்,பிரியாணி என தேர்தலை திருவிழாவாக மாற்றி,பணத்தின் மூலம் வாக்குகளை வேட்டையாடி வெற்றி பெற கற்றுக்கொண்டார்கள் என்று என்னுடைய ஒரு மணி நேர விளக்கத்தை கேட்டவர் கை குலுக்கி உள்ளே வந்தவர் கை கூப்பி வணக்கம் தெரிவித்து விடை பெற்றார்.

Ø ஆட்சியாளர்களிடம் சொல்லித்தான் நடக்கவில்லை இந்த அமெரிக்க தூதுவரிடம் சொல்லிய பின்பாவது தமிழகத்தில் மாற்றம் நிகழாதா என்ற நட்பாசை மனதில் இருக்கத்தான் செய்தது.

என்று தெரிவித்துள்ளார்.

தமிழக நலம்விரும்பிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம் இது என்பதை இந்நிகழ்வு சொல்கிறது.

Leave a Response