அல்லு அர்ஜுன் படத்திற்கு முன் ‘சண்டக்கோழி-2’வை இயக்குகிறார் லிங்குசாமி..!


‘செல்லமே’ என முதல் படத்தில் சாக்லேட் பையனாக அறிமுகமான விஷால் இன்று அதிரடியான ஆக்சன் ஹீரோவாக ஜொலித்து வருகிறார் என்றால், அந்த ஆக்சன் ஹீரோ இமேஜை ஏற்படுத்தி கொடுத்த படம் தான் லிங்குசாமியின் இயக்கத்தில் வெளியான ‘சண்டக்கோழி’. இந்த வெற்றிக்குப்பின் இருவரும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து மீண்டும் ‘சண்டக்கோழி-2’வில் இணைய இருக்கிறார்கள்..

இந்தப்படத்தை ஆரம்பிப்பதில் பல சிக்கல்கள் உருவாகின.. லிங்குசாமிக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது.. சண்டக்கோழி-2 கைவிடப்படுவதாக கூட விஷால் அறிவித்தார்.. ஆனால் அஞ்சான்’ தோல்விக்கு பிறகு லிங்குசாமிக்கும், தற்போதைய நிலையில் தொடர் தோல்விப்படங்களை கொடுத்துவரும் விஷாலுக்கும் ஒரு கட்டாய வெற்றி தேவை என்கிற சூழ்நிலை உருவாகிவிட்டது..

ஆக மீண்டும் இந்தப்படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன… சமீபத்தில் அல்லு அர்ஜுன் படத்தை இயக்குவதாக அறிவித்த லிங்குசாமி, ‘சண்டக்கோழி-2’வை முதலில் முடித்துவிட்டு அதன்பிறகே அந்தப்படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார்.

Leave a Response