விமானப்படையில் சேர்வதற்கு தீபிகா படுகோனே பற்றி தெரிந்திருக்கவேண்டுமோ…?


சினிமா தான் படிப்பை கெடுக்கிறது என்று ஏற்கனவே கல்விக்கும் சினிமாவுக்கும் வாய்க்கால் தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது.. இதில் எரிகிற நெருப்பில் அவ்வப்போது எண்ணெயை ஊற்றுவதுபோல பாடப்புத்தங்கழிலோ அல்லது சில சர்வீஸ் கமிஷன் தேர்வுகளின் போது அறிவு வினாக்கழிலோ சினிமா பிரபலனகளை பற்றிய கேள்விகள் கேட்கப்படுவதும் அதை தொடர்ந்து ஒரு சர்ச்சை வெடிப்பதும் வாடிக்கை தான். இந்திய விமானப்படை நுழைவுத்தேர்வு கேள்வித்தாளில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பற்றி கேட்கப்பட்டுள்ள கேள்வியால் இந்தமுறை புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய விமானப்படையில் சேர்வதற்காக எழுதப்படும் தேர்வு தான் AFCAT.. இந்த தேர்வுக்காகன போது அறிவு கேள்விகள் செக்சனில் தீபிகா படுகோனேவுக்கு எந்தப்படத்தில் நடித்தற்காக 2016ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது என்றும் அதற்கான விடைகளாக பாஜிராவ் மஸ்தானி, தமாஷா, பிக்கு, ஹேப்பி நியூ இயர் என நான்கு படங்களின் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.. மாணவர்களுக்கும் தீபிகா படுகோனே படங்களுக்கும் என்ன சம்பந்தம்..? அவர்கள் அந்தப்படங்களை பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என கண்டனக்குரல்கள் கிளம்பியிருக்கின்றனவாம்.

Leave a Response