காசுமீர் மக்கள் மீதான இனப்படுகொலையை உடனே நிறுத்தக் கோரி தொடரும் போராட்டங்கள்

காசுமீர் மக்கள் மீதான இந்திய அரசின் வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 19-07-2016 செவ்வாய் மாலை சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழர் விடியல் கட்சி ஆகியனவற்றின் சார்பில் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தமிழ்த்தேசிய மற்றும் பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

காசுமீர் மக்களின் மீதான இந்திய அரசின் அரச பயங்கரவாதத்தையும், இனப்படுகொலைகளையும் நிறுத்தக் கோரியும், காசுமீரிலிருக்கும் 7,00,000 இந்திய ஆயுதப் படையினரை உடனே வெளியேற்றக் கோரியும், சிறப்பு ஆயுதப் படை சட்டத்தை(AFSPA) நீக்கக் கோரியும், காசுமீர் மக்களுக்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்திய அரசு ஐ.நாவில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் விவரித்தனர்.

ஈழத் தமிழர் சிந்திய ரத்தம் மட்டுமல்ல காசுமீர் மக்கள் சிந்தும் ரத்தமும் எங்கள் ரத்தம் என்று முழக்கங்களை எழுப்பினர்.

நிகழ்வில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் குமரன் உள்ளிடோரும்,

தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழகத்தின் குனங்குடி ஹனீபா, தமிழக மக்கள் முன்னணியின் பொழிலன் மற்றும் அரங்க குணசேகரன், தமிழ்ப் புலிகள் கட்சியின் நாகை.திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தபசி குமரன், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் முனிர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா வின் அப்துல் ரசாக், SDPI கட்சியின் அமீர் ஹம்சா, தமிழர் விடியல் கட்சியின் இளமாறன், பாபு, மே பதினேழு இயக்கத்தின் அருள்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பெரியார் சாக்ரடீஸ் ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை….

இந்தியாவின் ஒரு பகுதியாக காசுமீரை அறிவித்த நாள் முதல் காசுமீரில் பல்வேறு வன்முறைகள் இந்திய அரசினால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. காசுமீர் மக்கள்தங்கள் பிரிந்து போகும் உரிமையைக் கூறி போராடியதன் விளைவாக, 1948 இல்அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு ஐ.நாவிலும் பாராளுமன்றத்திலும்பலமுறை, காசுமீர் மக்களுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர்ச்சியாக 60 ஆண்டுகளுக்கும் மேலாக காசுமீர் மக்களை இந்திய அரசு ஏமாற்றி வருகிறது.

சுய நிர்ணய உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை என்று ஐ.நா சாசனம்தெரிவிக்கிறது. ஆனால் இந்திய அரசு தொடர்ச்சியாக போராடக் கூடிய மக்களை எல்லாம் தீவிரவாதிகள் என்று சித்தரித்து, காசுமீர் மக்களின் போராட்டத்தினை தீவிரவாதம் சார்ந்த ஒன்றாகவே இந்தியாவின் பிற பகுதி தேசிய இன மக்களுக்கு காட்டி வருகிறது. காசுமீர் மக்களின் கோரிக்கைகளை பாராளுமன்ற ஜனநாயக வழியில் அணுகாமல், ராணுவத்தைக் கொண்டே அணுகி வருகிறது. மக்களின் மீது ஒரு அரச பயங்கரவாதத்தினை பயன்படுத்தி ஒடுக்கி வருகிறது. அமைதி வழித்தீ ர்வைக் காட்டிலும் வன்முறையின் வழியாக தீர்வினைக் காணவே இந்திய அரசு முயன்று வருவதாகத் தெரிகிறது.

தற்போதைய பா.ஜ.க. அரசு பதவியேற்றவுடன் காசுமீருக்கென்று அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரமான அரசியலமைப்பு சட்ட விதி 370ஐ நீக்கப் போவதாக அறிவித்து, பிரச்சினையினை உருவாக்கியது. தொடர்ச்சியாக மக்களின்கோரிக்கைகளுக்கெல்லாம் மிரட்டல் ரீதியிலேயே பதிலளித்து வருகிறது.

1990 முதல் 2011 வரையிலான காலத்தில் மட்டும் 43,000 க்கும் அதிகமான மக்கள்காசுமீரில் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளின் படி அந்த காலக்கட்டத்தில்கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 70,000 க்கும் அதிகம். இதுவரையில் 1 லட்சத்துக்கும் அதிகமான காசுமீரிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏராளமான மனித புதைகுழிகள் காசுமீரெங்கும் தொடர்ந்து கண்டெடுக்கப்படுகின்றன.

பாலியல் வன்புணர்ச்சி என்பதை காசுமீரியப் பெண்களுக்கு எதிரான ஆயுதமாக இந்திய ஆயுதப் படைகள் பயன்படுத்தியாக மனித உரிமைகள்
கண்காணிப்பகத்தின்(HRW) அறிக்கை சொல்கிறது. பல்லாயிரக்கணக்கில் காசுமீரியப்பெண்கள் இந்தியப் படையினரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பெரும்பாலும் கிராமப்புறத்துப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதால் இதுவரையில் எத்தனை பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை கணக்கிடவே முடியவில்லை என்று மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிக்கிறது.

தற்போது கடந்த 08-ஜூலை- 2016 அன்று ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின்தளபதியான பர்ஹான் வானி என்பவர் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து காசுமீரில் பெரும் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பர்ஹான் வானியின் இறுதி ஊர்வலத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்திரண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இந்திய ஆயுதப் படைகள் காசுமீர்முழுவதும் தங்கள் அடக்குமுறைகளை தொடங்கியுள்ளன. பெல்லட் எனப்படும்துப்பாக்கிகளின் மூலம் கண்மூடித்தனமான தாக்குதலை இந்தியப் படைகள் நிகழ்த்தி வருகின்றன.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்திருப்பதோடு ஏராளமானோர் கண்களை இழந்துள்ளனர். கண்களை குறிபார்த்து இந்தியப் படையினர்தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கியுள்ளன. இந்த தாக்குதலில்குழந்தைகள் கூட தப்பவில்லை. கடந்த 10 நாட்களில் மட்டும் 44 காசுமீரிகள்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து ஒரு அமைதியற்ற நிலையினை காசுமீரில், அந்த மண்ணில் நிலைகொண்டிருக்கும் இந்திய ராணுவம், CRPF உள்ளிட்ட படைகள் நிகழ்த்தி வருகின்றன. இந்தியப் படையினரை வெளியேறச் சொல்லி காசுமீரின் தெருக்களெங்கும்காசுமீரிகள் முழக்கமிடுகிறார்கள். இந்தியப் படைகளுடன் வாக்குவாதத்தில்ஈடுபடுகிறார்கள்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக காசுமீரில் 7 லட்சம்ராணுவத்தைக் குவித்து வைத்து, ஒரு ஜனநாயகமற்ற சர்வாதிகார ராணுவ நிலமாக
காசுமீரை இந்திய அரசு மாற்றி வைத்திருப்பதே இத்தனை ஆயிரம் மக்களின்இறப்புக்கும் காரணமாக அமைந்துள்ளது. இந்த படுகொலைகளின் மீதோ, பாலியல்குற்றங்களின் மீதோ முறையான விசாரணைகள் கூட இதுவரையில் இந்தியஅரசினால் நிகழ்த்தப்படவில்லை. AFSPA எனும் சிறப்பு ஆயுதப் படை சட்டம்காசுமீரின் குடிமக்களுக்கு எதிரான கட்டற்ற அதிகாரத்தை இந்திய ஆயுதப்படைகளுக்கு வழங்குகிறது. இதன் மூலம் இந்தியப் படைகள் சந்தேகிக்கும்எவரையும் கைது செய்யவும், விசாரிக்கவும், சித்ரவதைக்கு உள்ளாக்கவும் முடியும்.

இந்த கருப்பு சட்டத்தினை நீக்கச் சொல்லி உலகெங்கும் மனித உரிமை செயல்பாட்டளர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். தொடர்ச்சியான இந்த படுகொலைகள்தமிழீழத்தில் இலங்கை அரசு செய்த இனப்படுகொலைக்கு நிகரான ஒன்றாக இருக்கிறது. தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகிற தமிழர்களாகிய நாம், இந்திய அரசு காசுமீர் மக்களின் மீது செலுத்தி வரும் இந்த வன்முறைகளுக்கும் எதிராக குரல் கொடுப்பதே நியாயத்தின் பாற்பட்டதாக இருக்கும்.

தமிழ்நாட்டின் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு இயக்கத்தின் தந்தையான ’பெரியார்’அவர்கள் 1940-50 களிலிருந்தே தொடர்ச்சியாக காசுமீரிகளுக்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளார். காசுமீர் பிரச்சினை குறித்து பேசிய பெரியார் “காசுமீர் பிரச்சினையை பற்றி நீங்கள் யார் பேசுவதற்கு? இந்தியாவும், பாகிஸ்தானும் யார்? காசுமீரிகள்,அவர்களைப் பற்றி முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. காசுமீரத்தைப் பற்றி முடிவு செய்யும் விஷயத்தைக் காசுமீர் மக்களுக்கே விட்டுவிட வேண்டும். காசுமீரத்திலே புகுந்திருக்கும் இந்தியாவும் வெளியேற வேண்டும்,
பாகிஸ்தானும் வெளியேற வேண்டும். இதுதான் காசுமீர மக்களுக்கு நீதி சொல்வதாகும்.” என்று காசுமீரிகளின் கோரிக்கையை ஆதரித்து பேசிய
முன்னோடியாக இருக்கிறார்.

காசுமீர் மக்களின் நீதிக்கான போராட்டங்களில் தமிழக மக்களாகிய நாங்கள் துணை நிற்போம் எனபதை அறிவிப்பதற்காக தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுக்கிறோம்.

கோரிக்கைகள்:

இந்திய அரசே!

 காசுமீர் மக்கள் மீதான இனப்படுகொலையை உடனே நிறுத்து.

 சிறப்பு ஆயுதப் படை சட்டத்தை(AFSPA) நீக்கு.

 காசுமீரிலிருந்து 7,00,000 இந்திய ஆயுதப் படைகளை உடனே வெளியேற்று.

 சுயநிர்ணய உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதை மறுக்காதே.

 காசுமீர் மக்களுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஐ.நாவில் கொடுத்த

வாக்குறுதியை நிறைவேற்று.

Leave a Response