புரட்சிக்கவிஞர் விருதை தலைவர் பிரபாகரனுக்குச் சமர்ப்பிக்கிறேன் – பாவலர் அறிவுமதி பேச்சு

சென்னை சி.அய்டி.காலனி கவிக்கோ அரங்கில் குடும்ப விழா என்று எண்ணத்தக்க வகையில்  புரட்சிக்கவிஞர் 126ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 29.4.2016 மாலை மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

பெரியார் விருது மற் றும் புரட்சிக்கவிஞர் விருது குறித்து அறிமுகப்படுத்தி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் உரையாற்றினார். சென்னையில் பார்ப்பனர் களின் இந்து சமய கலை விழா என்கிற போர் வையில் நடைபெறுவதாக இருந்த பார்ப்பன பண் பாட்டுப் படையெடுப்பை தொடக்கத்திலேயே முறியடித்திட திராவிடர் கழ கத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையின்மூலமாக   தமிழர் கலை பண்பாட்டுப்புரட்சி விழாவாக புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடத் தொடங்கியதுகுறித்த வரலாற்றுத் தகவல்களை எடுத்துக் கூறினார்.

இவ்விழாவில் முதன் முறையாக புரட்சிக்கவிஞர் விருது அளிக்க முடிவெ டுத்து, முதல் விருது பெறுபவராக பாவலர் அறிவுமதி தேர்வு செய்யப்பட்டார். பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர்  ஆசிரியர் கி.வீரமணி, பாவலர் அறிவுமதிக்கு சிறிய உருவிலான தந்தை பெரியார் முழு உருவச் சிலை, இயக்க வெளியீடுகள் வழங்கி பயனாடை அணிவித்து புரட்சிக்கவிஞர் விருது வழங்கி பாராட்டினார்.

பெரியார் விருத பெறு பவராக சிங்கப்பூர் எழுத்தா ளர் இரத்தின வெங்கடே சன் தேர்வு செய்யப்பட் டார். அவருக்கான விருதினை கி.வீரமணியிடமிருந்து பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

நாளிதழ், பருவ இதழ்களைப் பாதுகாத்து பரப்பி வருவதை வாழ்நாள்தொண் டாக செய்து வரும் திருச்சி பொறியாளர் பட்டாபிராமனுக்கு சென்னை புத்தகச் சங்கமத்தில் புத்தகர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி, பொறியாளர் பட்டா பிராமனுக்கு கி.வீரமணி, பய னாடை அணிவித்து, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகளை வழங்கி  புரட்சிக்கவிஞர் விழாவில் சிறப்பு செய்தார்.

விழாவில் புரட்சிக்கவிஞர் விருது பெற்ற பாவலர் அறிவுமதி பேசும்போது, மாடுகள் எல்லாம் மேய்ச்சலுக்கு போயிருக்கு மே19க்கு பிறகு திரும்பி வரும் நாங்க ஜாதியால கெட்டுபோயிட்டோம்னு அதுக்கு அப்புறம் தான் அய்யா (ஆசிரியர் வீரமணி) அவர்களுக்கும் அய்யா நெடுமாறன் அவர்களுக்கும் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கும் வேலை இருக்கு.
இங்கே பெரியாரை விட்டுவிட்டு தமிழையும் பேச முடியாது தமிழனையும் பேச முடியாது.
பொதுவாக மயிரிழையில் தான் விபத்து நடக்கும். ஆனால் தமிழனுக்கு என்னமோ “நூல்”யிழையில் தான் விபத்து நடக்கிறது. கவிக்கோ அரங்கில் புரட்சிக்கவிஞர் விருது வாங்கும் நேரதில் எனை வளர்த்தெடுத்த ஆண் தாய் அப்துல் ரகுமான் அவர்களை நினைவு கூருகிறேன். இந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதை தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு சமர்பிக்கிறேன் என்றார். 

Leave a Response