ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பு – வியப்பூட்டும் முடிவுகள்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடர் கள ஆய்வில் ஈடுபட்டு மக்கள் ஆய்வகம் அமைப்பு,ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலும் மக்கள் சந்திப்பை நடத்தியுள்ளது.

சனவரி 28 முதல் 31 வரை நான்கு நாள்கள் 118 இடங்களில் 1470 வாக்காளர்கள் கலந்து கொண்ட இந்த ஆய்வை 25 களத் தகவல் சேகரிப்பாளர்கள் நடத்தியுள்ளனர்.

அதில் கிடைக்கப் பெற்றிருக்கும் முடிவுகளை இன்று செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்தார் பேராசிரியர் ராஜநாயகம்.

அதன் விவரம்…

இந்த இடைத்தேர்தலில் திமுக வெல்வது உறுதி.

அங்கு சாதி ரீதியாக மக்கள் வாக்களிக்கும் நிலை உள்ளது.அப்படியும் எல்லாச் சாதியினரும் திமுகவுக்கே வாக்களிக்க விரும்புகிறார்கள்.

கருத்துக் கணிப்பு நாளன்று யாருக்கு ஓட்டு? என்கிற கேள்விக்கான விடை..

திமுக 59.5 விழுக்காடு
நாதக 16.7 விழுக்காடு
சுயேச்சைகள் 1 விழுக்காடு
நோட்டா 2.3 விழுக்காடு

ஆகியனவற்றோடு வாக்களிக்க விருப்பமில்லை என 17.6 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ள அதிமுகவின் வாக்குகளில் 39.2 விழுக்காட்டினர் திமுகவுக்கும் 19.5 விழுக்காட்டினர் நாதகவுக்கும் வாக்களிப்பர்.

பாஜகவின் வாக்குகளில் 17.6 திமுகவுக்கும் 57.9 நாதகவுக்கும் கிடைக்கும்.

தவெகவின் வாக்குகளில் 15.2 திமுகவுக்கும் 35.8 நாதகவுக்கும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த இடைத்தேர்தலோடு 2026 சட்டமன்றத் தேர்தலின் போது யாருக்கு வாக்கு? என்கிற கேள்விக்கு

திமுக 33.3 விழுக்காடு
அதிமுக 19.4 விழுக்காடு
தவெக 18.7 விழுக்காடு
நாதக 11.0 விழுக்காடு
பாஜக 3.5 விழுக்காடு

இவ்வாறு வாக்காளர்கள் விடை சொல்லியுள்ளனர்.

2026 இல் முதலமைச்சராக யார் வரவேண்டும்? என்கிற கேள்விக்கு

மு.க.ஸ்டாலின் 31.5 விழுக்காடு
எடப்பாடி பழனிச்சாமி 20.2 விழுக்காடு
விஜய் 19.6 விழுக்காடு
சீமான் 8.0 விழுக்காடு
அண்ணாமலை 7.9 விழுக்காடு

இவ்வாறு விடை கிடைத்துள்ளது.

பெரியார் குறித்த விவாதம் வாக்காளர்களிடம் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்று தெரிகிறது.

இவ்விவாதம் இடைத்தேர்தல் முடிவுகளை பாதிக்கும் சூழல் இல்லை என 60.5 விழுக்காட்டினரும் நிச்சயமாகப் பாதிக்கும் என 11.4 விழுக்காட்டினரும் என்று கருத்து சொல்லியுள்ளனர்.

இவற்றிற்கிடையே நடிகர்களின் இரசிகர்கள் யாருக்குக் கிடைக்கும்? என்கிற கேள்வி கேட்கப்பட்டு அதற்கான விடையையும் பெற்றிருக்கிறார்கள்.

அதன்படி,

அஜீத் இரசிகர்கள் 37.4 விழுக்காடு திமுகவுக்கும் 24.9 விழுக்காடு நாதகவுக்கும் ஓட்டுப் போடுவார்கள்.

அனைவரும் ஆச்சரியப்படும்விதமாக விஜய் இரசிகர்களில் 55.6 விழுக்காட்டினர் திமுகவுக்கு ஓட்டுப் போடுவார்கள்.நாதகவுக்கு 11.1 விழுக்காடு.

ரஜினி இரசிகர்களில் 75.0 விழுக்காட்டினர் திமுகவுக்கும் 10.5 விழுக்காட்டினர் நாதகவுக்கும் ஓட்டுப்போடவுள்ளனர்.

கமல் இரசிகர்களில் 65.2 விழுக்காடு திமுக 9.8 விழுக்காடு நாதக.

விஷால் இரசிகர்களில் 34.3 விழுக்காட்டினர் திமுகவுக்கும் 36.8 விழுக்காட்டினர் நாதகவுக்கும் வாக்களிப்பர் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பின்படி பார்த்தால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும் என்றும் அதேவேளை வாக்குச் சரிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

Leave a Response